கண்ணம்மா வீட்டுக்குச் சென்று அஞ்சலிக்கு எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 26.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அம்மாவை அழைத்து வருவதற்காக வேகவேகமாக அஞ்சலி வீட்டிற்கு சென்றார் பாரதி. அங்கு அஞ்சலியின் அம்மா வீட்டை பெருக்கி கொண்டிருக்கும் போது பாரதியின் காரை பார்த்து ஷாக் ஆகிறார். ஒருவேளை கண்ணம்மா விவாகரத்து விஷயம் பற்றிப் பேச வந்திருப்பார். பணம் கொண்டு வந்திருப்பார் என அவராக ஒரு கணக்குப் போடுகிறார்.

கண்ணம்மா வீட்டுக்குச் சென்று அஞ்சலிக்கு அதிர்ச்சி கொடுத்த பாரதி.. கண்ணம்மா எடுத்த அதிரடி முடிவு - பாரதிகண்ணம்மா இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்

அவர் வந்ததும் அவரிடம் பேசிய அஞ்சலியின் அம்மா அஞ்சலி எப்படி இருக்கா என கேட்க பாரதிக்கு ஒரே ஷாக்‌. அப்போ அஞ்சலி இங்கே வரலையா என பாரதி கேட்க வரலையே மாப்பிள்ளை என சொல்கிறார். ‌ அதன்பிறகு அங்கிருந்து கிளம்புகிறார் பாரதி. அஞ்சலி ஹேமாவை கூட்டிட்டு எங்கே போயிருப்பார் என யோசிக்கும் பாரதி காரை நேராக கண்ணம்மா வீட்டிற்கு விடுகிறார்.

இந்த பக்கம் அஞ்சலி கண்ணம்மாவிடம் இன்னைக்கு வீட்டுக்கு கிளம்புகிறோம் என சொல்ல அதெல்லாம் முடியாது நான் சொல்லும்போது தான் போகணும் என சொல்கிறார். நான் உனக்காக நாட்டுக்கோழி கறி எடுத்துட்டு வந்து சமைச்சு தருகிறேன் என சொல்லிவிட்டு கடைக்கு கிளம்புகிறார்.

அம்மாவும் லட்சுமியும் அஞ்சலியிடம் கேம் விளையாடும் போவதாக கூறி போனை வாங்கிக் கொள்கின்றனர். மாப்பிள்ளை வந்த விஷயத்தை அஞ்சலியிடம் சொல்ல வேண்டும் என அவருடைய அம்மா போன் செய்கிறார். லஷ்மி அப்புறம் பேசிக்கலாம் என கட் செய்து விடுகிறார். பின்னர் குழந்தைகளிடமிருந்து போனை பிடுங்கிய அஞ்சலி நாம இன்ட்ரஸ்டிங்கா ஒரு விளையாட்டு விளையாடலாம் என கூறிவிட்டு விளையாட தொடங்குகின்றனர். இந்த நேரத்தில் பாரதி வந்து நிற்கிறார். அஞ்சலியும் ஹேமாவும் அப்படியே அதிர்ந்து போகின்றனர்.

எதையும் பேசாமல் கிளம்பலாமா என கேட்கிறார் பாரதி. அஞ்சலி தலையசைக்க பின்னர் மூவரும் வீட்டிற்கு கிளம்புகின்றனர். லஷ்மி கொஞ்ச நேரம் இருங்க அம்மா வந்துருவாங்க என சொல்ல உங்க அம்மாகிட்ட நாங்க கிளம்பி விட்டோம் என சொல்லிடு எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். காரில் ஹேமா எதுக்கு எதுவுமே பேசாம வரீங்க என கேட்க செம கோவத்துல இருக்கேன் என சொல்கிறார் பாரதி. பின்னர் கண்ணம்மா வந்து இருவரையும் அழைக்க லட்சுமி அவங்களை டாக்டர் அங்கிள் கூட்டிட்டு போயிட்டாரு என சொல்கிறார். என் பொண்ணு என் கூட இருக்கறதுல அவருக்கு என்ன பிரச்சனை? முதலில் அவரிடம் உண்மையை உடைக்கணும். அவர் வருத்தப்பட்டா எனக்கென்ன எனக்கு என் பொண்ணு வேண்டும் என முடிவு செய்கிறார் கண்ணம்மா ‌

இந்த பக்கம் வீட்டில் அனைவரும் இரண்டு குழந்தைகளும் கண்ணம்மாவிடம் இருப்பது பற்றி மகிழ்ச்சியாக பேசிக்கொள்கின்றனர். இந்த நேரத்தில் பாரதி அஞ்சலி மற்றும் ஹேமாவுடன் வீட்டிற்குள் நுழைய அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்க. ஹேமாவையும் பொய் சொல்ல பழக வச்சிட்டு இருக்கீங்க என சத்தம் போடுகிறார். இவங்க யார் கூப்பிட்டு இருந்தாலும் ஹேமாவை அனுப்பி இருக்க மாட்டேன். நீ முன்ன மாதிரியான அஞ்சலி இல்லை என சந்தோஷப்பட்டேன். உன்னை நம்பித்தான் நான் அனுப்பி வைத்தேன். ஆனா கடைசில நீயும் ஏமாத்திட்டல அஞ்சலி என சொல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட்.