கர்ப்பத்தை வைத்து பாரதிக்கு அதிர்ச்சி கொடுக்க முடிவெடுக்கிறார் வெண்பா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் சாந்தி கர்ப்பத்தை கலைத்து விடலாம். நான் போய் அதுக்கான மாத்திரை வாங்கி வருகிறேன் என சொல்ல வெண்பா யோசிச்சு இந்த கர்ப்பத்தை வைத்து பாரதியை திருமணம் செய்ய திட்டம் போடுகிறார்.

கர்ப்பத்தை வைத்து பாரதிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வெண்பா.. இப்போதைக்கு சீரியல் முடியாது போல - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதாவது தன்னுடைய குழந்தையை பாரதியை தனக்கு பிறக்கலனு நம்ப வைச்சேன். ஆனாலும் என்னால அவனை கல்யாணம் பண்ண முடியல. இப்போ இந்த கருவ வளர விட்டு இந்த கர்ப்பத்துக்கு பாரதி தான் காரணம் என நம்ப வைத்து அவனை கல்யாணம் பண்ணிக்க போறேன் என வெண்பா கூறுகிறார்.

அடுத்ததாக வாழ்த்துக்கள் என பாரதிக்கு மெசேஜ் அனுப்ப இதை பார்த்து பாரதி வெண்பாவிற்கு ஃபோன் போட்டு நான் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து வெளியே வந்திருக்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு போன் பண்ணி வாழ்த்து கூட தெரிவிக்கல என சத்தம் போட வெண்பா உன்ன மாதிரி தான் நானும் மரணம் வரை சென்று திரும்பி வந்து இருக்கேன் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. யார் கிட்டயாவது சொல்லி அழணும் போல இருக்கு என சொல்ல பாரதி என்ன விஷயம் என கேட்க நீ அவார்ட் பங்ஷனுக்கு போயிட்டு வழக்கமா சந்திக்கிற இடத்துக்கு வா என சொல்கிறார்.

கர்ப்பத்தை வைத்து பாரதிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வெண்பா.. இப்போதைக்கு சீரியல் முடியாது போல - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு அவார்ட் பங்ஷன் நடக்கிறது. பாரதி மற்றும் கண்ணம்மாவை பாராட்டி விருது வழங்குகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.