பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளைக்கு வெண்பா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Bharathi Kannamma Episode Update 26.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா நீ அடித்துக்கொண்டிருக்க அப்போது லட்சுமி இந்த தானே கொஞ்சம் வேகமாக வச்சா என்ன? ஒரே வேர்க்குது என கூறுகிறார். இதிலே நம்ப பாட்டி வீட்டுல ஃபுல்லா ஏசி எப்படி இருக்கும் நாம அங்க போய் விடலாம் என கூறுகிறார். இதனால் கண்ணம்மா நான் உன்கிட்ட என்ன சொன்னேன் திரும்பவும் அங்க போகலாம்னு ஆரம்பிக்கிற என திட்ட நீ உன் போனை குடு நானே இதை டீல் பண்ணிக்கிறேன் என போனை தேடி எடுத்து பாரதிக்கு போன் போடுகிறார். இதனால் லட்சுமி என்ன பேசப் போகிறார் என தெரியாமல் கண்ணம்மா பதறுகிறார்.

பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை.. வெண்பா கொடுத்த அதிர்ச்சி, லட்சுமியால் பதறி போன கண்ணம்மா - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பாரதி போனை எடுத்ததும் ஆபரேஷன் நல்லபடியாக செய்து முடிப்பதற்காக வாழ்த்துக் கூறி அவருக்கு ஒரு கிப்ட் கொடுக்க போவதாக சொல்லி முத்தங்களை கொடுக்கிறார். பிறகு போன் பேசிவிட்டு பயப்படாதே, அப்பா கிட்ட நான் எதையும் காட்டிக்க மாட்டேன் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் நண்பா நல்லா தூங்கி கொண்டிருக்க அப்போது ஷர்மிலா வந்து அவரை எழுப்பி இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க சீக்கிரம் ரெடியாகி விடு என கூறுகிறார். வெண்பா இதெல்லாம் வேண்டாம் என சொல்ல ஷர்மிலா நான் ஒரு முறை சொன்னா ஆயிரம் முறை சொன்ன மாதிரி என சாந்தியிடம் வெண்பாவிற்கு புடவை கட்டி நகைகளைப் போட்டு ரெடி பண்ண கூறுகிறார்.

அதன்பிறகு ஸ்கூலில் ஹேமா தனக்கு பேச்சுப் போட்டியில் முதல் பரிசு கிடைத்து இருப்பதாக லட்சுமியுடன் சொல்ல அவர் சௌந்தர்யா வந்ததும் இந்த விஷயத்தை சொல்ல லட்சுமிக்கு முத்தம் கொடுத்து சூப்பர் எனக் கூறுகிறார். உடனே ஹேமா பரிசு கொடுத்தது எனக்கு ஆனா முத்தம் கொடுக்கிறது லட்சுமிக்கு என கோபப்பட பிறகு அவரை சமாதானம் செய்து வாழ்த்துக் கூறுகிறார் சௌந்தர்யா.

பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை.. வெண்பா கொடுத்த அதிர்ச்சி, லட்சுமியால் பதறி போன கண்ணம்மா - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதற்கு அடுத்ததாக இந்த பக்கம் வெண்பாவை பொண்ணு பார்க்க மாப்பிள்ளையும் அவரது அப்பா அம்மாவும் வருகின்றனர். வெண்பா அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்வது போல நடித்து பிறகு மாப்பிள்ளையிடம் பேச வேண்டும் என சொல்லி உள்ளே அழைத்துச் செல்கிறார். மாப்பிள்ளையிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு அடுத்தடுத்து போன் கால் வருகிறது. வேறு வேறு ஆண் நண்பர்களின் பெயரை சொல்லி அவர்களிடம் ஜாலியாக பேசி முத்தம் கொடுத்த மாப்பிள்ளை முகம் சுழிக்க தொடங்குகிறார். இதைப்பார்த்து வெண்பா மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.