முருங்கக்காய் ஐட்டமாக சாப்பிட்ட பாரதி நடு இரவில் தவியாய் தவித்து உள்ளார்.

Bharathi Kannamma Episode Update 25.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. வாய்தா வடிவுகரசி முருங்கைக்காய் முருங்கைக் கீரையை வைத்து சமைத்துக் கொடுத்த உணவுகளை மொத்தமாக சாப்பிட்ட பாரதி நடுஇரவில் தவியாய் தவிக்கிறார். கண்ணம்மாவை கட்டி அணைத்து கொள்ள முயற்சி செய்கிறார். ‌‌ ஒரு பக்கம் கண்ணம்மாவும் அவரும் சந்தோஷமாக இருந்த நினைவுகள் அவரது மனதிற்குள் ஓடுகிறது. கண்ணம்மாள் என் கன்னத்தில் பாரதி கை வைக்க சென்ற நேரத்தில் கண்ணமா தனக்கு செய்த துரோகம் பற்றி நினைத்து அவரைத் தொடாமல் கையை எடுத்து விடுகிறார்.

கோர்ட் உத்தரவு என்ற பெயரில் என்னை இந்த வீட்டுக்கு வர வைத்து என் கூட புருஷன் பொண்டாட்டியா சந்தோஷமாக வாழ்ந்து விடலாம் என்று திட்டம் போடுறியா. என் வாழ்க்கையை கெடுத்து நரகமாக்கிட்ட. நீ எனக்கு செஞ்ச துரகம் மறக்கவே முடியாது என கூறி வெளியே எழுத்து செல்கிறார்.

மறுநாள் காலையில் வாய்தா வடிவுக்கரசி வந்து என்ன கரன் அம்மா மட்டும்தான் ஒரே ஜாலியா எனக் கேட்க நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் தான் இருக்கோம் ஆனா புருஷன் பொண்டாட்டியா இல்லை என கூறுகிறார். இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை பற்றி பேசுகிறார்.

இந்த பக்கம் லட்சுமி தூக்கத்தில் கண்ணம்மாவை யாரோ அடிக்க அவர் கதறி அழுவது போல கனவு கண்டு பதறி எழுதுகிறார். உடனே சவுந்தர்யா வந்து அவரை சமாதானம் செய்து வைக்கிறார்.

இந்த பக்கம் பாரதிக்கு நேரம் ஆகிடுச்சு என அவசர அவசரமாக கிச்சிடி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் கை தவறி தண்ணீர் ஊற்றி விடுகிறார் கண்ணம்மா. இதனால் பாரதி கடுப்பாகி நான் வெளியே சாப்பிடுகிறேன் என கூறுகிறார். இப்படி மொத்தமா சொன்னா எப்படி எல்லாமே வேஸ்ட் ஆயிடும் என கண்ணம்மா சொல்ல என்னால எதுவும் வேஸ்டாக வேண்டாம் என பணத்தை எடுத்துக் கொடுக்கிறார். இந்த நேரத்தில் சரியாக சௌந்தர்யா வந்துவிட பிறகு அவர் பாரதியை திட்ட பாரதி கோபப்பட்டு மருத்துவமனைக்கு கிளம்பிவிடுகிறார். பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவை அமர வைத்து அவருக்கு காபி போடுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.