வெண்பா பற்றிய உண்மையை இன்னமும் மூடி மறைத்துள்ளார் அஞ்சலி.

Bharathi Kannamma Episode Update 25.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அஞ்சலி தன்னுடைய குழந்தைக்கு முத்தம் கொடுத்து அன்பை வெளிப் படுத்துகிறார். பிறகு கண்ணம்மா நடந்த பிரச்சனையை மனசு வச்சிக்காம எல்லாத்தையும் மறந்துட்டு சந்தோஷமாய் இரு என கூறுகிறார். அப்படியெல்லாம் விட முடியாது திட்டம் போட்டு இந்த வேலையைச் செய்தது யார் என்று கண்டுபிடித்து தீரவேண்டும் என சௌந்தர்யா கூறுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)

வெண்பா பற்றிய உண்மையை மூடி மறைக்கும் அஞ்சலி.. கண்ணம்மா விவகாரத்தில் பாரதி எடுக்கும் முடிவு என்ன? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு அஞ்சலி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்ததும் கோவிலுக்குள் என்னை கடத்தவில்லை வெளியில் வைத்து தான் கடத்தினார்கள். அண்ணா அண்ணானு யாரோ ஒருவரிடம் பேசினார்கள் என கூறுகிறார். இப்படியே பயந்து பயந்து வெளியே போயிட்டு இருக்க முடியாது. இதை செய்தது யார் என்று கண்டுபிடித்தே ஆகவேண்டும் என அகில் கூறுகிறார். பாரதியை சௌந்தர்யாவிடம் நீங்க உங்களுக்கு தெரிஞ்ச போலீஸ் அதிகாரியிடம் இதைப்பற்றி சொல்லுங்க நானும் சொல்கிறேன் என கூறுகிறார்.

அற்புதமான ஒரு காமெடியன் BALA – Anti Indian Producer Aadham Bava Speech

பிறகு பாரதியிடம் சௌந்தர்யா கோர்ட் சொன்ன தீர்ப்பு குறித்து என்ன முடிவு செய்திருக்க என கேட்கிறார். பாரதி பதில் சொல்லாமல் எழுந்து சென்று விடுகிறார். அகிலன் என்னம்மா இவன் இப்படி எதுவும் சொல்லாமல் போறான் என கேட்க விட்டு பிடிப்போம் என கூறுகிறார் சௌந்தர்யா.

வெண்பா பற்றிய உண்மையை மூடி மறைக்கும் அஞ்சலி.. கண்ணம்மா விவகாரத்தில் பாரதி எடுக்கும் முடிவு என்ன? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

ரூமுக்குள் அஞ்சலி குழந்தையுடன் உயிர் தப்பியதை நினைத்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அகிலன் வந்து ஏன் என்கிட்ட இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது மறைச்ச. நீ இல்லாம நான் மட்டும் சந்தோஷமா இருந்து இருப்பனா? நடைப்பிணமாக வாழ்ந்து செத்து இருப்பேன் என கூறுகிறார். பிறகு அஞ்சலி மன்னிப்பு கேட்கிறார். இனியும் இதுபோல செய்யாத அப்புறம் நானும் என் பையனும் சேர்ந்து அடிப்போம் என கூறுகிறார். ‌‌ அஞ்சலி என்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லனும் என கூறிவிட்டு ஐ லவ் யூ என கூறுகிறார். பதிலுக்கு லவ் யூ என கூறி முத்தமிடுகிறார்.

பிறகு சௌந்தர்யா கணவருக்கு போன் செய்து தீர்ப்பு குறித்து என்ன முடிவு செய்திருக்க என கேட்கிறார். கோர்ட் தீர்ப்பை பின்பற்றித்தான் ஆகவேண்டும் என கூறுகிறார். மேலும் உனக்கு ஆசை இல்லையா என கேட்க ஆசை இல்லைனு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன். ஆனால் அது மட்டுமே ஆசை இல்ல. எப்படி ஆச்சு ஒரு ஓரமா வந்துட்டு போகும் அவ்வளவுதான் என கூறுகிறார். இந்த ஆறு மாத முடிவில் எல்லா பிரச்சனையும் தீர்ந்து நீங்க சந்தோசமா வாழனும். ரெண்டு பேத்தியும் இந்த வீட்டில் துள்ளி விளையாடணும் என சொல்கிறார். ரொம்ப ஆசையை வளர்த்துக்காதீங்க அத்தை. எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆகணும் என கூறுகிறார். எல்லாமே நல்ல படியாகத்தான் இருக்கும் என கூறிவிட்டு பாரதியிடம் பேசி பிறகு உனக்கு சொல்கிறேன் என கூறிவிட்டு சௌந்தர்யா போனை வைக்கிறார். இத்துடன் முடிகிறது பாரதிகண்ணம்மா எபிசோட்.