கண்ணம்மா செய்த வேலையால் பாரதிக்கு வெண்பா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Bharathi Kannamma Episode Update 25.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஒரு பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா‌. இன்றைய எபிசோடில் வெண்பா தன்னுடைய அம்மாவுக்கு ஐஸ் வைத்து இந்த மாப்பிள்ளையை வேண்டாம் பாரதி அந்த கண்ணம்மாவை விவாகரத்து செய்து விட்டு என்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குவான் என கூறுகிறார். உடனே சரி இல்லை என்னிடம் கொடுத்த வாக்கு ஞாபகத்தில் இருக்கு இல்ல ரயில்வே ஸ்டேஷனில் பஸ் வரும்னு எதிர்பார்ப்பது என்னைக்குமே நடக்காது என கூறுகிறார்.

கண்ணம்மா செய்த வேலையால் பாரதிக்கு வெண்பா கொடுத்த அதிர்ச்சி.. பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு வெண்பா ஜெயிக்கிறது இந்த வெண்பாவை இல்ல அந்த அமெரிக்கா பிரிட்டன் மாப்பிள்ளையா என்பதை பார்க்கலாம் என தனியாக சென்று சவால் விட்டு கொள்கிறார். அதன்பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் செய்து விவாகரத்து பற்றி கேட்க உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்க லட்சுமிதான் சொன்னதாக கூறுகிறார். கூடிய விரைவில் எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக சந்தோஷமாக இருப்போம் என சொல்ல உங்களது வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் அத்தை என கண்ணம்மா கூறுகிறார்.

பிறகு இந்த பக்கம் லட்சுமி கண்ணம்மாவுக்கு திரிஷ்ட்டி சுத்தி போடுகிறார். இந்த பக்கம் வெண்பா பாரதிக்கு போன் போன் செய்து நான் அன்னைக்கு கோபத்துல ஐ ஹேட் யூன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் நீ எனக்கு ஒரு போன் பண்ணி சமாதானம் செய்யணும் என்று கூட உனக்கு தோனல. அன்னைக்கு அந்த கண்ணம்மா போன் எடுத்து என் புருஷனுக்கு எதுக்கு நீ போன் பண்றேன்னு என் கிட்ட பேசுற என சொல்ல இது எப்போ இதெல்லாம் எனக்கு தெரியாது என பாரதி கூறுகிறார். இதையெல்லாம் நான் நம்பணும் என கிண்டலடிக்கிறார் வெண்பா.

கண்ணம்மா செய்த வேலையால் பாரதிக்கு வெண்பா கொடுத்த அதிர்ச்சி.. பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

டாக்டர் அசோசியேஷன் தலைவர் உன்னை பாராட்டும்போது ஓகே சார்னு சொல்றத விட்டுட்டு எல்லாத்துக்கும் கண்ணம்மா தான் காரணம்னு அவளை தூக்கி பாராட்டுற, ஓகே பாரதி தாயென போனை வைக்க பாரதி வெண்பாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். பிறகு இன்னைக்கு ஹேமா போனை வைத்து கொண்டிருந்தபோது கண்ணம்மா பேசியிருக்க முடியும் என நினைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.