கண்ணம்மாவை பார்த்தது ஹேமா செய்த வேலையால் பாரதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு ரோஹித் வெண்பாவின் மனதில் இடம் பிடிக்க என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறார் அப்போது பாரதி அவளுக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்கும் தேடி தேடி சென்று பிரியாணி சாப்பிடுவாள் என கூறிய ஞாபகம் வந்து உடனே பிரியாணி செய்து வெண்பாவிற்கு கொடுக்கலாம் என முடிவு செய்து கிச்சனுக்குச் சென்று பிரியாணி சமைக்கிறார். பிறகு சாந்தியிடம் இது நீ சமைத்தது என சொல்லி வெண்பாவுக்கு கொடு என கூற அவரும் அப்படியே செய்கிறார். வெண்பாவம் பிரியாணி சிக்கன், இரண்டும் சூப்பராக இருக்கு என ஒரு கட்டு கட்டுகிறார். பின்னர் இந்த பிரியாணி சமைத்த கைக்கு நச்சு நச்சுனு நாலு முத்தம் கொடுக்கணும் என சொல்ல ரோகித் கையை நீட்டுகிறார். பிரியாணி சிக்கன் என எல்லாத்தையும் நான் தான் சமைத்தேன் என சொன்ன உடனே வெண்பா அதான் நல்லாவே இல்லை என நாடகம் போடுகிறார். ரோகித் சீக்கிரம் மனதில் இடம் பிடிப்பேன் என சபதம் விடுகிறார்.

கண்ணம்மாவை பார்த்ததும் ஹேமா செய்த வேலை.. அதிர்ச்சியான பாரதி, காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் ஹேமாவை பார்க்க மற்றும் மற்றும் கண்ணம்மா என இருவரும் பாரதி வீட்டிற்கு வருகின்றனர். பாரதியுடன் வெளியே சென்றிருந்த ஹேமா வீட்டிற்கு வந்ததும் கண்ணம்மாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்கிறார். யார் சொல்லியும் டாடி விவாகரத்து விஷயத்தில் கேட்கவில்லை. சமையல் அம்மா சொன்னா கண்டிப்பா கேட்பாங்க என நினைத்து டிவோர்ஸ் எல்லாம் வேணாம் நீங்களாவது சொல்லுங்க சமையல் அம்மா என ஹேமா அழ தொடங்குகிறார். பாரதி ஹேமாவை அழுவதை நிறுத்தி என சொல்லியும் அவர் தொடர்ந்து ப்ளீஸ் டாடி என கெஞ்சி கெஞ்சி அழுகிறார்.

கண்ணம்மாவை பார்த்ததும் ஹேமா செய்த வேலை.. அதிர்ச்சியான பாரதி, காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஒரு கட்டத்தில் நான் யாரையும் விவாகரத்து சரியல்ல போதுமா என சொல்ல ஹேமா சந்தோஷப்படுகிறார். அவர் மட்டுமல்லாமல் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் ஹேமா இதோடு விடாமல் சத்தியம் செய்யுங்கள் எனக் கேட்கிறார். இதனால் பாரதி யோசிக்க இத்துடன் இன்றைய சீரியல் எபிசோட் முடிவடைகிறது.