ஹேமாவை கண்ணம்மா ஒரு பக்கம் தேடி அலைய டெல்லிக்கு போன பாரதி போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளும் லட்சுமி ஹேமாவை காணாமல் பதறிப் போகிறார். உடனே எல்லா இடத்திலும் தேடிப்பார்த்து ஹேமா இல்லாததால் அம்மாவுக்கு போன் போட்டு ஹேமா ஆள் இல்லை என அழுது கொண்டே சொல்ல கண்ணம்மா என்னாச்சு ஏது என விசாரிக்கிறார்.

ஹேமாவை தேடி அலையும் கண்ணம்மா.. பாரதி எடுத்த ஷாக் முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு லட்சுமி ஹேமா தன்னிடம் உனக்கு அப்பா யாருன்னு தெரியுமா தெரியாதா என தலையில் சத்தியம் செய்து சொல்ல சொன்னதால் தெரியும் ஆனால் நானேதான் அப்பா யார் என்று கண்டுபிடித்தேன் நீயும் அதே போல கண்டுபிடியென சொன்னேன். அதனால் அவள் அப்பாவை தேடி போயிட்டான்னு நினைக்கிறேன் என சொல்ல கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறாள்.

பிறகு வீட்டுக்கு வரும் கண்ணம்மா ஹேமா எங்க போனான்னு தெரியலையே என்ன வருத்தப்பட குமார் அண்ணா சௌந்தர்யமா வீட்டுக்கு போயிருக்க வாய்ப்பு இருக்கு என்ன சொல்ல உடனடியாக கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் போட்டு ஹேமா வந்தாளா என கேட்க சௌந்தர்யா இல்லைன்னு சொல்ல கண்ணம்மா அவள் காணாமல் போன விஷயத்தை சொல்ல அவர்களும் பதறிப் போகின்றனர்.

ஹேமாவை தேடி அலையும் கண்ணம்மா.. பாரதி எடுத்த ஷாக் முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஒரு பக்கம் ஹேமா ஆசிரமத்தை தேடி அலைய மறுப்பக்கம் ரவுடிகள் அவளை தேடி அலைகின்றனர். டெல்லிக்கு வரும் பாரதி ரிசல்ட்டில் எந்த குளறுபடியும் நடக்கக்கூடாது என்று தான் நேரடியாக நான் டெல்லிக்கு வந்துள்ளேன். கண்ணம்மா தப்பு செஞ்சிருக்க மாட்டான்னு என் உள் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு அப்படி மட்டும் நடந்தா அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன். அப்படி ரிசல்ட் வரலனா இப்படி முட்டாள் தனமான வாழ்க்கையை வாழக்கூடாது என்று என் வாழ்க்கையை முடிச்சுக்குவேன் என போனை சுவிட்ச் ஆப் செய்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.