ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து உயிருக்கு போராடுகிறார் அஞ்சலி மற்றும் அகிலன்.

Bharathi Kannamma Episode Update 23.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வீட்டில் சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் பாரதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் பாரதி கீழே இறங்கி வர சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் இது குறித்து கேட்க கற்பனையில் கூட அதை நினைத்து பார்க்காதீங்க என கூறி விடுகிறார். அவளோட முகத்தைப் பார்த்தாலே எனக்கு செய்த துரோகம் தான் ஞாபகத்துக்கு வருகிறது என கூறுகிறார். நீதிமன்றத் தீர்ப்பைப் வீர கூடாது அப்படி மீறினால் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும் என சொல்ல தினம் தினம் ஜெயிலில் இருப்பது போலத்தான் இருக்கிறது அதற்கு அந்த ஜெயிலே பரவாயில்லை என கூறுகிறார் பாரதி.

சென்னையில் வெள்ளப் பாதிப்புகள் : மத்தியக் குழுவினர் நேரில் பார்வை..

ஆண் குழந்தையை பெற்றெடுத்து உயிருக்குப் போராடும் அஞ்சலி, அகிலன் - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த நேரத்தில் சௌந்தர்யாவுக்கு அகிலன் போன் செய்து அஞ்சலி காணாமல் போன உண்மையை கூற இவர்களும் பதறியடித்து போய் தேட கிளம்பி விடுகின்றனர். அகிலன் கண்ணம்மா மற்றும் நாட்டு வைத்திய பாட்டி ஆகியோர் அஞ்சலியை தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அகிலன் கண்ணம்மாவிடம் லொகேஷன் வந்துவிட்டதா என கேட்கிறார். பிறகு கண்ணம்மா அந்தப் பாட்டியின் பேத்திக்கு போன் செய்து கேட்க லொகேஷன் எடுக்க முடியவில்லை என கூறுகிறார். எனக்கு அகிலன் அஞ்சலி கையில் லேட்டஸ்ட் வாடச் ஒன்று உள்ளது அதை வைத்து லொகேஷனை கண்டுபிடிக்கலாம் என்றார். பிறகு அந்தப் பெண் வாட்சை வைத்து லொகேஷனை கண்டுபிடித்து அனுப்புகிறார்.

லொகேஷனை தேடி அகிலன் கண்ணம்மா ஆகியோர் செல்கின்றனர். ஒருவழியாக அஞ்சலியை அவர்கள் பார்த்து விடுகின்றனர். ஆனால் மாயாண்டி ஆட்கள் அகிலனுடன் சண்டையிடுகின்றனர். முதலில் அவர்களை அடித்து நொறுக்கிய அகிலன் பின்னர் மாயாண்டி பின்பக்கத்திலிருந்து தாக்க பிறகு அனைவரிடமும் அடிவாங்கி மயங்கி விழுகிறார்.

ஆண் குழந்தையை பெற்றெடுத்து உயிருக்குப் போராடும் அஞ்சலி, அகிலன் - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சம்பளம் வேணாம் நடிக்கிறேன் சொன்னேன் – Actor Ameer Funny Speech 

இந்த பக்கம் பிரசவ வலியில் துடித்த அஞ்சலையை அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்து மயக்கம் அடைகிறார். கண்ணம்மாவும் அந்த பாட்டியும் அஞ்சலியை எழுப்ப முயற்சி செய்ய அவர் எழுந்திருக்கவே இல்லை. கண்ணம்மா அகிலனை கூப்பிட்டு அகிலன் செல்லாததால் அவர் இங்கு வந்து பார்த்தபோது அகில் மயக்கத்தில் இருக்கிறார். கண்ணம்மா அகிலை எழுப்ப முயற்சி செய்தும் அவரும் எழுந்து கொள்ளவில்லை. இப்படியே இருவரும் மயக்கத்தில் இருக்க பாட்டியும் கண்ணம்மாவும் பதறி போகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.