கண்ணம்மா கொடுத்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்க பாரதி அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா லட்சுமிக்கு ஹேமா தன்னுடைய தங்கச்சி என்ற உண்மை தெரிந்து விட்டதாக சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சியடைகிறார். எப்படி தெரிந்தது என கேட்க கண்ணம்மா நடந்த விஷயத்தை சொல்ல பிறகு சரி விடு பார்த்துக்கலாம் என கூறுகிறார்.

சௌந்தர்யா சொன்ன வார்த்தை.. கண்ணம்மா கொடுத்த அதிர்ச்சி, பாரதி எடுக்கும் முடிவு என்ன? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்ததாக அகில் அஞ்சலிக்கு தன்னை காப்பாற்றியதற்காக நன்றி சொல்லி எமோஷனலாக பேசுகிறார். பிறகு கண்ணம்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லோருக்காவும் சௌந்தர்யா வீட்டில் சமையல் செய்ய பாரதி ரொம்ப பசிக்குது என சொல்ல பிறகு எல்லோரையும் கூப்பிடுங்க என சொல்ல எல்லோரையும் கூப்பிட்டு உட்கார வைக்கின்றனர். என்ன சாப்பாடு என கேட்க சௌந்தர்யா உப்புமா என சொல்ல பாரதியும் லட்சுமியும் அதிர்ச்சடைகின்றனர். இதுக்கு தீவிரவாதி கிட்ட மாட்டி செத்தே போய் இருக்கலாம் என பாரதி நக்கல் அடிக்கிறார்.

அதன்பிறகு கண்ணம்மா உப்புமா ஒன்னும் கிடையாது வெஜ் புலாவ் செஞ்சு இருக்கேன் என அனைவருக்கும் பரிமாறுகிறார். எல்லோரும் சாப்பிட்டு கண்ணம்மாவின் சமையலை பாராட்டுகின்றனர். சௌந்தர்யா பாரதியிடம் இருக்கும் மாற்றத்தை பார்த்து ஆச்சரியப்படுகிறார். பிறகு பாரதியிடம் இப்பயாவது கண்ணம்மா உன் மேல வச்சிருக்க அன்பையும் காதலையும் புரிந்துகொள். நான் உன்னை அவளோட சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தல ஆனா யோசிச்சு நல்ல முடிவா எடு என சொல்ல பாரதி யோசிக்கிறான்.

சௌந்தர்யா சொன்ன வார்த்தை.. கண்ணம்மா கொடுத்த அதிர்ச்சி, பாரதி எடுக்கும் முடிவு என்ன? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு கண்ணம்மா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஹேமா சாமியிடம் நான் நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இதே மாதிரி இங்கேயே இருக்கணும்னு வேண்டிக்குவேன் என சொல்ல பாரதி இதை கேட்டு இன்னும் யோசிக்க தொடங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.