பாரதி ஹேமாவை வெளியே கூட்டிச் சென்றது இந்த நிலையில் அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்து உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ரோகித் பூஜை போடுகிறேன் என்ற பெயரில் பாட்டை சத்தமாக வைத்து வெண்பாவை வெறுப்பேத்துகிறார். இந்த பக்கம் பாரதி ஹேமாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று இருக்கிறார்.

வெளியே கூட்டி போன பாரதி.‌. அழுது ஆர்ப்பாட்டம் செய்த ஹேமா - பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு அப்டேட்

வெளியே சென்ற இவர் ஹேமாவுக்கு என்ன வேண்டும் எனக்கேட்க அவர் சாக்லேட் மில்க் ஷேக் என கூறுகிறார். இதே நேரத்தில் ஹேமா ஒரு அம்மா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அம்மா ஞாபகம் வந்து பாரதியிடம் நீங்க யாருக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க? எங்க அம்மா யாரு அவங்க எங்க இருக்காங்க? என கேள்வி கேட்க தொடங்குகிறார். பொது இடம் என்று கூட பார்க்காமல் ஹேமா எழுந்து நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகணும் என சத்தமாக பேசுகிறார். ‌ என்ன செய்வது என தெரியாமல் தவித்த பாரதி கொஞ்சம் பொறுமையா இரு, உக்காரு என அவரை சாந்தம் செய்கிறார்.

வெளியே கூட்டி போன பாரதி.‌. அழுது ஆர்ப்பாட்டம் செய்த ஹேமா - பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு அப்டேட்

இந்த பக்கம் சௌந்தர்யா லட்சுமிக்கு சாப்பாடு கொடுக்க ஸ்கூலுக்கு சென்று இருக்க அப்போது ஹேமா அவங்க அப்பாவோட வெளியில் சென்று இருப்பதாக சொல்ல லட்சுமி கோபப்படுகிறார். அப்போ நான் அவருக்கு ஒன்னும் இல்லையா என்ன தான் வெளிய கூட்டிட்டு போக மாட்டாரா என கேட்கிறார். அப்பாகிட்ட எப்படியாவது பேசி விவாகரத்து விஷயத்தை தடுத்து நிறுத்துங்கள் என லட்சுமி சொன்ன சௌந்தர்யா கண்டிப்பா விவாகரத்து கொடுக்காமல் இருக்க என்ன பண்ணணுமோ அதை பண்ணுகிறேன் என்று கூறுகிறார். பாரதி குழந்தைகளுக்காவது இந்த விஷயத்தை கை விடனும் என சௌந்தர்யா யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.