தெருத்தெருவாக கண்ணம்மா அலைய ஹேமாவால் கதறி அழுதுள்ளார் லட்சுமி.

Bharathi Kannamma Episode Update 22.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி அவசர அவசரமாக வெளியில் கிளம்ப அந்த நேரத்தில் காலில் இடித்துக் கொள்கிறார். உடனே ஓடி வந்த கண்ணம்மா அவருடைய காலுக்கு ஸ்ப்ரே அடித்து நட்டை விட்டு காலை குணப்படுத்துகிறார். அதுமட்டுமல்லாமல் பதற்றத்துடன் இருந்த அவரை தியானம் செய்ய வைத்து அமைதிப்படுத்துகிறார். பிறகு இப்போ பத்திரமா போயிட்டு வாங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும் என பாரதியை வழியனுப்பி வைத்தார்.

தெருத்தெருவா அலையும் கண்ணம்மா.. ஹேமாவால் கதறியழும் லட்சுமி, பாரதி எடுக்கப்போகும் முடிவு - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் ஹேமாவும் லட்சுமியும் ஒன்றாக பேசிக்கொண்டிருக்கும் போது ஹேமா நாம ரெண்டு பேரும் சமையல் அம்மாவுடன் கொஞ்ச நாள் இருக்கலாம். அவங்க தனியாதான் இருக்காங்க என சொல்கிறார். லட்சுமியும் சூப்பர் ஐடியா எனக் கூறுகிறார். அதன் பிறகு உன்னுடைய பரம்பரை என்ன என கேட்க எனக்கு தெரியாது எனக்கு தெரியாதே என லட்சுமி கூறுகிறார். தாத்தா பாட்டி பெயர் கேட்க அதுவும் எனக்கு தெரியாது என சொல்ல ஹேமா சிரித்துக்கொண்டே தன்னுடைய தாத்தா பாட்டியிடம் போய் சொல்கிறார். அஞ்சலி ஹேமாவை சிரிக்காத என சொல்லியும் அவர் சிரிக்க லட்சுமி அழுதுகொண்டே உள்ளே ஓடி விடுகிறார். பிறகு சௌந்தர்யா ஹேமாவிடம் அப்படி எல்லாம் பேசக்கூடாது இப்போ அவளை சமாதான படுத்து என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அதன்பிறகு அகிலன் கண்ணம்மா பாரதி பிரச்சனையில் குழந்தைகள் அவஸ்தைப் படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. இது லட்சுமியோட வீடு அவ இந்த குடும்பத்தோட வாரிசு. ஒவ்வொரு குத்தையும் பயந்து பயந்து கேட்டு கேட்டு செய்யும்போது நீயும் இந்த வீட்டு குழந்தை தானு சொல்லி விடலாம் போல இருக்கு. பாவம் அவர் உண்மையை சீக்கிரம் சொல்லிடுங்க என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

தெருத்தெருவா அலையும் கண்ணம்மா.. ஹேமாவால் கதறியழும் லட்சுமி, பாரதி எடுக்கப்போகும் முடிவு - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் கண்ணம்மா தெருத்தெருவாக மாவு போடுவதை பார்த்து வருத்தப்படுகிறார் பாரதி. எதுக்கு இவை இவ்வளவு கஷ்டப் படணும் வந்த ஆட்டோ டிரைவரை கூட்டிட்டு வந்து இருக்கலாம் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் கண்ணம்மாவுக்கு உதவி செய்யலாம் என காரை விட்டு இறங்க அவருடைய மனசாட்சி எதை எதையோ பேசி அவரை குழப்ப மீண்டும் அவர் காருக்குள் ஏறி விடுகிறார். அவர் கண்ணம்மாவுக்கு உதவுவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.