கண்ணம்மா வீட்டுக்குப் போன ஹேமாவிற்கு சௌந்தர்யா அதிர்ச்சி கொடுக்க அதற்கு பதில் கூறியுள்ளார் கண்ணம்மா

Bharathi Kannamma Episode Update 22.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமாவை அழைத்துக்கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் அஞ்சலி. இருவரையும் பார்த்த கண்ணம்மா மிகுந்த உற்சாகத்தோடு என்ன சமைக்கட்டும் எனக் கேட்கிறார். அஞ்சலி அதெல்லாம் நீ ஒன்றும் சமைக்க வேண்டாம் ஆன்லைனில் ஆர்டர் பண்ணி விடலாம் நாம ஜாலியா பேசிக்கொண்டு இருக்கலாம் எனக் கூறுகிறார்.

குழந்தைகள் இருவரும் ஓகே சொல்ல ஆன்லைனில் ஆர்டர் போட்டு விட்டு அனைவரும் உற்சாகமாக அமர்ந்து பேசிக் கொண்டு விளையாடிக் கொண்டும் இருக்கின்றனர். இதற்கிடையில் லட்சுமி அம்மா நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும் என கூறுகிறார். என்னவென்று கேட்டதற்கு நான் கூப்பிட்டா விளையாட வர மாட்டேன்னு சொன்ன வாலை தூக்கி அடுப்பில் போட்டு விடுவேன் என்று சொன்ன. ஆனா இப்போ ஹேமா கூப்பிட்டதும் வந்து விளையாடுற எனக் கேட்டார். எல்லாரும் ஒண்ணா சேர்ந்து விளையாடும் நான்தான் ஜாலியா இருக்கும் எனக் கூறி சமாளித்து விடுகிறார்.

அஞ்சலி ஆன்லைனில் ஆர்டர் செய்ய போனில் எடுத்த போது பாரதி போல் செய்து வீட்டிற்கு போய்டீங்களா என்று என்று கேட்க வந்து விட்டோம் எனக் கூறுகிறார். அதேபோல் ஹேமாவும் சரியாக பேசி பாரதியை சமாளித்து விடுகிறார். பிறகு மாலை நேரத்தில் சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் செய்கிறார். நலம் விசாரித்துவிட்டு இரண்டு நாளில் ஹேமாவை அனுப்பிவிட்டு அதற்குமேல் பாரதியை சமாளிக்க முடியாது என கூறுகிறார். என்ன அத்தை கெடு வைக்கிறீங்களா? இனிமே ஹேமாவை அனுப்பக்கூடாது தான் தோணுது ஆனால் உங்களோட நிலமையை நினைத்து நான் அனுப்புகிறேன். ஆனால் இரண்டு நாளில் எல்லாம் அனுப்ப முடியாது எனக்கு எப்போ தோணுதோ அப்போ அனுப்பி வைக்கிறேன் என கூறிவிட்டு போனை வைக்கிறார். இத்துடன் முடிகிறது பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.