கண்ணமாவிடம் கண்டபடி பேசி பாரதிக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Bharathi Kannamma Episode Update 22.01 22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவை செய்யாத தவறை ஒப்புக் கொள்ளச் சொல்லி காயப்படுத்தி அவரை வெளியே அனுப்பிய பாரதியைக் வீட்டில் உள்ள அனைவரும் திட்டித் தீர்க்கின்றனர். நான் என் மனசுல இருக்குறத நியாயப்படி பேசினேன். தப்பு பண்ணா அதை ஏத்துக்கணும் அது தான் மனித குணம் என கூறுகிறார். சௌந்தர்யா அவரை கண்டபடி திட்ட அதன்பிறகு கண்ணம்மாவின் அப்பா பேசத் தொடங்குகிறார்.

என் பொண்ணு புத்தி கெட்டவள், பிழைக்கத் தெரியாதவள். நீங்க சொன்ன மாதிரி ஆமா நான் தான் தப்பு பண்ணேன் என ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இன்னைக்கு எவ்வளவு பெரிய வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். புத்தி கெட்டுப் போய் அவ வீட்டை விட்டு வெளியே போறா. அது மட்டும் சரின்னு சொல்லி இருந்தா இவ்வளவு பெரிய மாளிகைகளை ராணி மாதிரி வாழ்ந்திருக்கலாம். அவளுக்கு படிப்பறிவு இல்லாததால இதெல்லாம் புரியல. தன்னம்பிக்கை சுயமரியாதைனு பேசிக்கிட்டு திரியுரா, அதை வச்சு ஒரு கிலோ அரிசி வாங்க முடியுமா இல்ல ஒரு பால் பாக்கெட் வாங்க முடியுமா.? இங்க கொடுத்தது எப்பேர்பட்ட வாய்ப்பு அத அவளுக்கு பயன் படிக்க தெரியல. உங்க மனசுக்கு முன்னாடி நாங்க எல்லாம் பேச தகுதியே கிடையாது என சொல்ல என்ன வஞ்சப் புகழ்ச்சியாக என பாரதி கேட்கிறார்.

அவர் பேசுறதுல என்ன தப்பு இருக்கு ஒரு பெத்த பொண்ணு இப்படி பார்க்கும்போது யாருக்கு தான் கோபம் வராது என கூறுகிறார். அவரு சும்மா பேசிட்டு இருக்காரு நினைத்து சந்தோஷப் படு என கூறுகிறார். என்னம்மா நீங்களே அருவா எடுத்து வெட்ட சொல்லுவீங்க போல என பாரதி சொல்ல அப்படி எல்லாம் நான் பண்ண மாட்டேன். யாரோ சொல்வதை அப்படியே கேட்டு நடக்கிற பழக்கம் எங்களுக்கு கிடையாது. நாங்க ஏழைகள்தான் அடிபணிந்து போவோமே தவிர அண்டி பிழைக்க மாட்டோம்.

ஒன்பது வருஷமா என் பொண்ணு பட்ட கஷ்டத்தை எல்லாம் நீங்களும் பார்த்து விட்டு தானே இருக்கீங்க. செய்யாத தப்பை ஒத்துக்க சொன்னா எப்படி ஒத்துக்க முடியும். ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி என் பொண்ணு தப்பு பண்ணாத ஒத்துக்கிட்டு உங்க கூட சேர்ந்து வாழ சொன்னாங்கனு வெச்சுகிட்டாலும் நாளைக்கு யாரோ ஒருத்தர் சொன்னாங்கன்னு திரும்பவும் உங்க மனசுல சந்தேக புத்தி முளைக்காதுனு என்று என்ன நிச்சயம். சந்தேகம் ரத்து ஆலமரம் மாதிரி அது கிளை கிளையா வளர்ந்துகொண்டே போகும். உங்க தப்பு எல்லாம் தெரிஞ்சிக்கிற ஒரு நாள் வரும் அன்னைக்கு உங்கள சுத்தி யாருமே இருக்க மாட்டாங்க. ஐயோ அம்மான்னு அலறியடித்து ஓடி வருவீங்க அத்தனை பேர் முன்னாடி தலைகுனிந்து நிற்பீங்க. என்னால இருக்கவே எல்லாத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கும் ஒரு நாள் கூலி கொடுப்பான். உங்க பணம் செல்வாக்கு ஆணவம் எல்லாம் அழிஞ்சு ஒருநாள் ஒன்னும் இல்லாம நிப்பீங்க இது சாபம் இல்லை சத்தியம் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு மேலே போன பாரதியை கை பிடித்து நிற்க வைத்து எங்க போற கோட் சொன்னது ஞாபகம் இருக்கா இல்லையா இதையே சாக்காக வைத்து இங்கேயே இருக்கலாம் பாக்காத என கூறுகிறார். அங்க போன இருவருக்கும் சண்டை வரும் சச்சரவு வரும் மனக்கசப்பு ஏற்படும் என பாரதி சொல்ல அதெல்லாம் உன் பிரச்சனை எனக்கு கோர்ட்டு தீர்ப்பை மதிக்கணும் என கூறுகிறார்.

வழியில் அழுது கொண்டே நடந்து செல்லும் கண்ணம்மாவை லட்சுமி மற்றும் ஹேமா பார்த்து விடுகின்றனர். பிறகு இருவரும் இறங்கி கண்ணம்மா விடம் ஓடிச்செல்ல அவர் பாரதி வீட்டிற்கு வந்துவிட்டார் என ஹேமாவிடம் கூறுகிறார். லட்சுமியின் வீட்டிற்கு கூட்டிச் செல்கிறேன் என கூட்டிட்டு கிளம்புகிறார். இந்தப் பக்கம் கண்ணம்மாவின் அப்பா கண்கலங்கி வந்து கொண்டிருக்க அப்போது பார்த்த மாயாண்டி என்ன எது எனக் கேட்க கண்ணம்மாவின் வாழ்க்கை மொத்தமாக முடிஞ்சிடுச்சு போய் சொல்லு எல்லார்கிட்டயும் சொல்லு என சொல்லிவிட்டு போய்விட்டார். நல்ல விஷயம் இதை உடனே வெண்பா கிட்ட சொல்லனும் என முடிவு செய்கிறார் மாயாண்டி. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.