ஹேமாவை கண்ணம்மாவிடம் சேர்க்க அஞ்சலி போட்ட திட்டம் கை கூடியுள்ளது.

Bharathi Kannamma Episode Update 21.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இரவு கண்ணம்மா போன் செய்து பேசியதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார் சௌந்தர்யா. அந்த நேரத்தில் அவருடைய கணவர் பேப்பரில் எதையோ காண்பித்து பேச அதையும் அவர் கண்டு கொள்ளவில்லை. அதன் பின்னர் அகிலன் இந்த வாரம் மூணு படம் ரிலீசாகுது. எல்லாரும் சேர்ந்து படத்துக்கு போகலாம் என கூறுகிறார். இப்போதைக்கு படத்துக்கெல்லாம் ஒன்னும் தேவையில்லை என சௌந்தர்யா கூறுகிறார்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

ஹேமாவை கண்ணம்மாவிடம் சேர்க்க அஞ்சலி போட்ட புது திட்டம், ஓகே சொன்ன பாரதி - பாரதிகண்ணம்மா இன்றைய சீரியல் எபிசோடு அப்டேட்

அவருடைய கணவர் காலையில் எழுந்ததில் இருந்தே நீ எதை யோசித்துக் கொண்டிருக்க என்ன ஆச்சு என கேட்கிறார். அதற்கு கண்ணம்மா போன் செய்து ஹேமாவை என்னிடம் கொடுத்து விடுங்கள் எனக் கூறியது பற்றி கூறுகிறார். அவருடைய கணவர் ஹேமாவை முழுமையாக கண்ணம்மாவுடன் இப்போதைக்கு அனுப்பவில்லை என்றாலும் ரெண்டு மூணு நாளைக்கு கண்ணம்மா வீட்டில் இருக்க வைக்கலாம் எனக் கூறுகிறார். ஆனால் அதற்கு பாரதியை எப்படி சம்மதிக்க வைப்பது என தெரியவில்லை என்று கூறுகிறார் சௌந்தர்யா.

இந்த நேரத்தில் அஞ்சலி நான் ஒரு ஐடியா சொல்கிறேன் என கூறி நான் ஹேமாவை கூட்டிக்கொண்டு எங்க வீட்டுக்கு செல்வதாக பாரதி மாமாவிடம் கூறிவிட்டு கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறேன் என கூறுகிறார். ஐடியா நல்லாத்தான் இருக்கு என சௌந்தர்யா கூற அந்த நேரத்தில் பாரதியும் ஹேமாவும் வருகின்றனர். அஞ்சலி பாரதியிடம் எங்க வீட்டுக்கு போகப்போகிறேன் ஹேமாவை கூட்டிட்டு போகிறேன் என கூறுகிறார். முதலில் தயங்கிய பாரதி அதன் பின்னர் சரி என ஒப்புக் கொள்கிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய பாரதி நானே உங்களை ட்ராப் செய்து விடுகிறேன் என கூறுகிறார். இதனால் அஞ்சலி என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறார்.

BIGG BOSS-ல சிலப்பேர் நடிக்குறாங்க.., கமல் Sir சண்டை போடணும் – Siddarth Open Talk..!

இருவரையும் பாரதி அஞ்சலி வீட்டில் விடுவதற்காக அழைத்து சென்று கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு போன்கால் வருகிறது. மருத்துவமனையில் அவசர அவசரமாக அவரை அழைக்க வழியிலேயே இருவரையும் இறக்கி வேறு ஒரு கார் புக் செய்து அனுப்பி வைக்கிறார்.

இந்தப் பக்கம் காலையிலிருந்து கண்ணம்மாவுக்கு ஹேமாவின் ஞாபகமாகவே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஹேமாவின் முகம்தான் தெரிகிறது. லட்சுமி வேறு என்னுடன் விளையாட யாருமே இல்லை என புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

பாரதி உயிரோடு காரில் ஏற்றி விட்ட பின்னர் ஹேமா உங்க வீட்டில் யாரெல்லாம் இருப்பாங்க என அஞ்சலி விட்டு விட்டெடுக்க தாத்தா பாட்டி இருவர் மட்டும் தான் இருப்பாங்க என கூறுகிறார். அப்படின்னா எனக்கு போர் அடிக்குமே போகும்போது முதல்ல சமையல் அம்மா வீட்டுக்கு போயிட்டு அதுக்கப்புறம் பாட்டி வீட்டுக்கு போகலாமா என கேட்கிறார். அஞ்சலி எதிர்பார்த்தது தானாகவே நடப்பதால் அவரும் சரி என ஒப்புக் கொள்கிறார். இருவரும் கண்ணம்மா வீட்டுக்கு செல்கின்றனர். ஹேமா சமையல் அம்மா என அழைக்க வெளியில் ஹேமா நிற்பதைப் பார்த்த கண்ணம்மா இதுவும் பிரமை தான் என நினைத்துக்கொண்டு போடி நான் கண்டுக்க மாட்டேன் எனக் கூறுகிறார்.

அதன்பிறகு அஞ்சலியும் ஹேமாவும் உள்ளே செல்கின்றனர். அஞ்சலி அக்கா என கண்ணம்மாவை அசைக்க கண்ணம்மா மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.