கண்ணம்மாவிடம் ஆதாரத்தோடு கையும் களவுமாக சிக்கி உள்ளார் வெண்பா.

Bharathi Kannamma Episode Update 20.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி கண்ணம்மா விட்டு சென்று ஒட்டிக் கொள்வதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று யோசிக்கிறார். இதனையடுத்து அவர் அஞ்சலியின் அம்மாவுக்கு போன் செய்து கண்ணம்மாவின் விவாகரத்து பற்றி பேசியது என்னாச்சு என கேட்க அவரின் இதெல்லாம் உடனே செய்கிற விஷயம் இல்லை கொஞ்சம் காலம் பொறுங்க எனக் கூறுகிறார். உங்களுக்கு ஒரு கோடி தருகிறேன் என்று சொன்னேன் ஞாபகம் இருக்குல எனக்கேட்க அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு ஒரு கோடி ஆச்சே என கூறுகிறார்.

கண்ணம்மாவிடம் ஆதாரத்தோடு கையும் களவுமாக சிக்கிய வெண்பா.. பாரதிக்கு தெரியவரும் உண்மை?? - பாரதிகண்ணம்மா இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் கோவிலில் நேருக்கு நேரா வெண்பாவின் விட்டுச்சென்ற கண்ணம்மா அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். கதவைத் திறந்த வெண்பாவுக்கு ஒரே அதிர்ச்சி. கண்ணம்மாவை பார்த்து ஷாக்காகிறார். வெண்பாவை உள்ளே அழைத்த கண்ணம்மா அவருக்கு நெற்றியில் விபூதி வைத்து உனக்கு நல்ல புத்தி வரணும்னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டேன் என கூறுகிறார். சீக்கிரம் என் குழந்தை என் கண்ணுல காட்டணும் என வேண்டி கொண்டதாக கூறுகிறார். என் குழந்தை எப்படி இருப்பார் அவளுடைய கன்னி எப்படி இருக்கும் மூக்கு எப்படி இருக்கும் எதற்காக அவளுடைய போட்டோவையாவது காட்டு என கேட்கிறார்‌. அதெல்லாம் காட்ட முடியாது என வெண்பா கூறுகிறார்.

உனக்கு என் மேல கோவம் இருந்தா அதை என் மேல காட்ட வேண்டியதுதானே எதுக்கு என் பொண்ண கடத்துன என கேட்கிறார். நான் வாழ வேண்டிய வாழ்க்கையை கெடுத்து நீ வாழ்ந்துட்டு இருக்க. அதுதான் உன் வாழ்க்கையை கெடுக்க இப்படி செய்தேன் என கூறுகிறார். நீ கஷ்டப் படுவதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமா இருக்கு என கூறுகிறார். இது எல்லாம் கண்ணம்மா இதுவே என் மேலே போனை வைத்து ரெக்கார்ட் செய்ததாக கூறி வெண்பாவை அலற விடுகிறார். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம் அந்த வீடியோவை டெலிட் செய்து விடு என கண்ணம்மாவிடம் கெஞ்சுகிறார் வெண்பா. பிறகு வீடியோவை எடுக்கல என கூறி பல்ப் கொடுக்கிறார் கண்ணம்மா.

இந்தப் பக்கம் ஹேமாவும் அஞ்சலியும் பேசிக்கொண்டிருக்கும் போது வீட்டு வேலைக்காரம்மா கையில் பச்சை குத்தி இருப்பதை பார்த்து அது என்ன ஏது என்று கேட்கிறார் ஹேமா. சௌந்தர்யா அதற்கு விளக்கம் சொன்னதையடுத்து நானும் பச்சை குத்திக் கொள்ளப் போகிறேன் என கூறுகிறார். யாருடைய பெயரை எனக் கேட்க அப்பா பெயரை எனக் கூறியதும் இதனைக் கேட்ட பாரதி மகிழ்ச்சி அடைகிறார். என்னையும் உன் பொண்ணையும் யாராலும் பிரிக்க முடியாது எனக் கூறுகிறார்.

இரவில் கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வெண்பாவை கடத்த வருவது போல கனவு கண்டு அலறி எழுகிறார் கண்ணம்மா. எனக்கு சவுந்தர்யாவுக்கு போன் போட்டு ஹேமா குறித்து நலம் விசாரிக்கிறார். எனக்கு ஹேமா நினைவாகவே இருக்கு.. அவளை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள் என கூறுகிறார்.

ஹேமாவை கண்ணம்மாவிடம் ஒப்படைத்தால் பாரதி உடைந்து விடுவான். கண்ணம்மாவிடம் கொடுக்கவில்லை என்றால் அது அவளுக்கு செய்யும் துரோகம். என்னுடைய நிலைமை யாருக்கும் வரக்கூடாது என புலம்புகிறார். இத்துடன் முடிகிறது பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.