மருத்துவமனைக்குள் போலீஸ் புகுந்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் போலீசார் மருத்துவமனைக்குள் கண்ணம்மா சொல்லிக் கொடுத்த வழியில் உள்ளே புகுந்து தீவிரவாதிகளை தாக்குகின்றனர்.

மருத்துவமனைக்குள் புகுந்த போலீஸ்.. பாரதிக்கு வந்த பெரும் ஆபத்து, தீவிரவாதிகள் பிடியில் ஹேமா லட்சுமி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

தீவிரவாதிகள் போலீஸ் புகுந்ததை அறிந்து பாரதியின் உடம்பில் வெடிகுண்டை கட்டி தொங்க விடுகின்றனர். போலீஸ் ஒரு வழியாக உள்ளே புகுந்து தீவிரவாதிகள் பிடியில் சிக்கி இருந்த அனைவரையும் வெளியே கொண்டு செல்ல முயற்சி செய்ய கண்ணம்மா நீங்க எல்லோரும் வெளியே போங்க நான் அவர் எங்கே என்று கண்டுபிடித்து கூட்டிட்டு வரேன் என சொல்ல அஞ்சலி நானும் கூட வரேன் என சொல்கிறார்.

பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பாரதி மற்றும் அகிலை தேடுகின்றனர். இந்த பக்கம் எல்லோரும் போலீஸ் வெளியே கொண்டு செல்ல முயற்சி செய்ய தீவிரவாதிகள் போலீஸ் மாறி மாறி சுட்டு மடிகின்றனர். கடைசியில் கண்ணம்மாவும் அஞ்சலியும் தேடிச் செல்லும் போது அவர்களை தீவிரவாதிகள் சுட முயற்சி செய்ய அந்த சத்தம் கேட்டு ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் மேலே ஓடுகின்றனர்.

கடைசியில் கண்ணம்மா பாரதியை கண்டுபிடிக்க அஞ்சலி அகிலை கண்டுபிடிக்கிறாள். பாரதி நீ இங்க இருந்து போயிடு என சொல்ல கண்ணம்மா உங்கள விட்டு என்னால எப்படி போக முடியும் நான் போக மாட்டேன் என கூறுகிறார்.

மருத்துவமனைக்குள் புகுந்த போலீஸ்.. பாரதிக்கு வந்த பெரும் ஆபத்து, தீவிரவாதிகள் பிடியில் ஹேமா லட்சுமி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மேலே ஓடி வந்த ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் தீவிரவாதிகளின் பிடியில் சிக்க துப்பாக்கி முனையில் வைத்து போலீஸிடம் அழைத்துச் செல்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.