கண்ணம்மாவுக்கு விஷ ஊசி போட பார்த்துள்ளார் வெண்பா.

Bharathi Kannamma Episode Update 20.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் கண்ணம்மா வீட்டிற்குச் சென்று வந்தது புகைப்படத்தை பார்த்து பாரதி கொடுத்த ரியாக்ஷனை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஐசிசி வரட்டும் : இன்சமாம் வலியுறுத்தல்

சௌந்தர்யாவின் கணவர் நம்ம நேராப் போய் கண்ணம்மா கிட்ட நடந்தது எல்லாத்தையும் சொல்லி விடலாம்‌‌. முதலில் கோபப்படுற அப்புறம் எல்லாம் நல்லதுக்குத்தான் என புரிந்து கொள்வார் என கூறுகிறார். ஆனா கண்ணம்மா என்ன பத்தி என்ன நினைப்பா என சௌந்தர்யா புலம்புகிறாள்.

கண்ணம்மாவுக்கு விஷ ஊசி போடப் பார்த்த வெண்பா.. பதறிப்போன லஷ்மி - பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்.!!

இன்னொருபுறம் வெண்பா சமையல் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்க அவர் வீட்டு வேலைக்காரி சாந்தி நீங்க எதுக்குமே இந்த வீடியோ பார்த்துட்டு இருக்கீங்க என கேட்கிறார். பாரதிக்கு விதவிதமாக சமைத்து கொடுக்கத்தான் எனக்கூற அது எப்படி முடியும் என சாந்தி கேட்கிறார். அதன் பின்னர் பாரதி வீட்டிற்குச் சென்று சமைத்து கொடுத்த கதையை வெண்பா கூறுகிறார்.

கண்ணமா வீட்டில் கண்ணம்மா தூக்கத்திலிருந்து எழாமல் மயக்க நிலையில் இருக்கிறார். அவரைப் பார்த்த லட்சுமி பதறிப்போய் பாரதிக்கு போன் செய்கிறார். பாரதி போனை எடுக்காததால் வெண்பாவிற்கு போன் செய்கிறார். கண்ணம்மா வீட்டிற்கு வந்த வெண்பா உன் தங்கச்சிக்கு தான் மாத்திரை கொடுத்தேன் ஆனா அவ குத்துக்கல்லாட்டம் இருக்கா. அந்த வேலையை காட்ட வேண்டியதுதான் என கண்ணம்மாவுக்கு விஷ ஊசி போட முயற்சி செய்கிறார்.

அந்த நேரத்தில் கண்ணம்மா விழித்துக் கொள்கிறார். இதனால் உடனே ஊசியை மறைத்து விடுகிறார் வெண்பா. அதன் பின்னர் லஷ்மி நான் டீ போட்டு தருகிறேன் என கூறுகிறார். இதனையடுத்து கண்ணம்மா நானே போடுவேன் என கூறிவிட்டேன் பால் வாங்கிட்டு வரச்சொல்லி லட்சுமியை அனுப்புகிறார்.

இதற்கிடையில் வெண்பா நான் சொன்ன மாதிரி பேசுமாறு கண்ணம்மாவை வற்புறுத்துகிறார். எனக்கு போன் செய்து மிஸஸ் பாரதி வெண்பா மேடம் பேசுறீங்களா என கேட்க சொல்கிறார். உனக்கு வெட்கமாய் இல்லையா என் கழுத்தை நெரித்துக் கொன்றுடலாம் போல இருக்கு என கண்ணம்மா கூறுகிறார். கொண்ணுடு ஆனா உன்னோட பொண்ணு பார்க்கவே முடியாது என வெண்பா கூறுகிறார்.

மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela

அதுமட்டுமல்லாமல் நீ ஜெயிலுக்கு போய்ட்டா உன்னுடைய இந்த பொண்ணும் பிச்சை எடுக்க வேண்டியதுதான் என கூறுகிறார். அதன் பின்னர் கண்ணம்மா டீ போட்டு ஸார்ஸ்ஸஸ்ல கொடுக்கிறார். எங்க வீட்டுல கப் இல்லை என கூறுகிறார். டீ குடித்து விட்டு லஷ்மியிடம் உங்கள் அம்மா கிட்ட ஒரு உதவி கேட்டு இருக்கிறேன் என அதை செய்ய சொல்லு என கூறி விட்டு செல்கிறார்.

அந்த ஆண்ட்டி கேட்கிற உதவியை சொல்லி விடு என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் அப்டேட்.