ஊருக்கு திரும்பி வரும் பாரதி கண்ணம்மா உட்பட எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா வீட்டுக்கு வரும் ஊர் பெரிய மனுஷங்க இனிமே பாரதி இந்த ஊருக்குள்ள நுழைய முடியாது அக்கம் பக்கத்தில் இருக்க ஊர்லயும் தங்க முடியாது எல்லோருக்கும் செய்தி சொல்லியாச்சு இனி வேறு வழி இல்லாம அவர் மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு பட்டணத்துக்கு தான் போய் ஆகணும் என கூறுகின்றனர்.

ஊருக்குள் திரும்பி வந்த பாரதி... கண்ணம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இப்படியான நிலையில் காரில் பாட்டு சத்தம் அதிகமாக வைத்துக் கொண்டு என்ட்ரி கொடுக்கிறார் பாரதி. மாசாக வந்து இறங்கும் பாரதி இனிமே நான் இந்த ஊர்ல தான் இருப்பேன் உங்களால என்ன ஒன்னும் பண்ண முடியாது என சொல்ல ஊர் பெரிய மனுஷங்க உன்னால இந்த ஊர்ல இருக்க முடியாது உனக்கு இந்த ஊர்ல யார் அப்படி ஆதரவு தருகிறார்கள் என கேட்க போலீஸ் வந்து பாரதி அரசாங்கத்திடம் இந்த ஊருக்கு மருத்துவ சேவை செய்ய அனுமதி வாங்கி வந்திருப்பதாக கூறுகிறார். மேலும் அவர் இந்த ஊர் சமுதாய கூடத்துல தான் தங்குவாரு அவரை நீங்க யாரும் வெளியே அனுப்ப முடியாது தேவைப்பட்டால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க சொல்லி இருக்காங்க என சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அது மட்டுமல்லாமல் பாரதி நான் செய்ய வேண்டிய சேவைகளை செய்து முடித்துவிட்டு தான் இந்த ஊரை விட்டுப் போவேன் என கூறுகிறார். மறுபக்கம் வெண்பா ஜெயிலில் இருக்க இரண்டு நாள் லீவு முடித்து வேலைக்கு வரும் ஜெயிலர் அம்மாவிடம் வெண்பா பற்றி புகார் அளிக்க அவர் வெண்பாவுக்கு பாடம் புகட்டாமல் விட மாட்டேன் என உள்ளே செல்ல வெண்பா கண்ணுக்கு அவர் கண்ணம்மா போல தெரிவதால் அவரையும் வெண்பா அடித்து துவைத்து அனுப்புகிறார். அடியே கண்ணம்மா உன்னை கொல்லாம விடமாட்டேன் என ஆக்ரோஷமாக சத்தம் போடுகிறார்.

ஊருக்குள் திரும்பி வந்த பாரதி... கண்ணம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அதன் பிறகு இந்த பக்கம் பஞ்சாயத்து கூடி பாரதி புத்திசாலித்தனமா அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி இந்த ஊருக்குள்ள நுழைந்து இருக்காரு. அவராவே இந்த ஊரை விட்டு ஓட வைக்கணும், அதுக்காக அவருக்கு இந்த ஊர்ல இருக்க யாரும் அன்னம் தண்ணி கூட கொடுக்கக் கூடாது. யாரும் அவர்கிட்ட சிகிச்சை எடுத்துக்க கூடாது. அவரை இந்த ஊரை விட்டு தள்ளி வைத்து இருக்கோம் அவருக்கு யாராவது உதவி செஞ்சா அவங்களையும் ஊர விட்டு தள்ளி வச்சிடுவோம் என முடிவேடுகின்றனர்.

அதன் பிறகு ஹேமா லட்சுமி மற்றும் பூஜா என மூவரும் கண்ணாமூச்சி விளையாட அப்போது பாரதி அங்கு வர கண்ணை கட்டிக் கொண்டிருந்த ஹேமா பாரதியை பிடித்து பூஜாவை பிடித்ததாக சொல்கிறார். பிறகு பாரதி பூஜா இல்ல டாடி என சொல்ல ஹேமா அதிர்ச்சியடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.