கோர்ட்டில் பாரதி கண்ணம்மா விவாகரத்து வழக்கில் கொஞ்ச நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannamma Episode Update 19.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கோர்டில் சௌந்தர்யா நீதிபதியிடம் பாரதி மற்றும் கண்ணம்மா குறித்து பேசுகிறார். இருவரையும் சேர்த்து வைக்க செய்த முயற்சிகள் தோல்வியடைந்ததாக கூறுகிறார்.

அதன் பின்னர் நீதிபதி கண்ணம்மாவிடம் உன்னுடைய தரப்பில் இருந்து யாராவது வந்திருக்கிறார்களா என கேட்க அப்பா வந்திருப்பதாக கூறுகிறார். பிறகு கண்ணம்மாவின் அப்பா சண்முகத்தை நீதிபதி விசாரிக்கிறார். நீங்க இதுவரைக்கும் உங்க பொண்ணை மாப்பிள்ளையோடு சேர்த்து வைக்க எதுவும் செய்யலையா என கேட்கிறார். நான் ஒரு கையாலாகாத தகப்பன். என்னுடைய முதல் தாரத்துக்கு பிறந்த மகள் தான் கண்ணம்மா. இவ பொறந்த கையோட இவ அம்மா போய் சேர்ந்துட்டா. பிறகு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சித்தி கொடுமைய கண்ணம்மா அனுபவிச்சா. பிறகு ஒருநாள் பாரதி டாக்டர் வந்து உங்க பொண்ண எனக்கு பிடித்திருக்குனு சொன்னாரு. விசாரிச்சு பார்த்து தங்கமான மனுஷன் கோடீஸ்வரனு தெரிஞ்சது. இதைவிட என்ன வேணும்னு கட்டிக் கொடுத்த ஆனா இப்ப என் பொண்ணு நடுத்தெருவில் நிற்கிறாரா. ஒரு நாள் எல்லாம் சரியாகி ரெண்டு பேரும் சேருவாங்க நினைச்சேன். அதனாலதான் அமைதியாக இருந்தேன் என கூறுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (19.11.2021 : வெள்ளிக் கிழமை)

கோர்ட்டில் வரப்போகும் தீர்ப்பு?? பிரசவ வலியில் துடிக்கும் கடத்தப்பட்ட அஞ்சலி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு நீதிபதி பாரதியிடம் எல்லாரும் நீங்க சேர்ந்து வாழ்வது தான் சொல்றாங்க என கூற எனக்கு விருப்பமில்லை. நான் ரொம்ப தூரம் வந்துவிட்டேன் திரும்ப போக முடியாது. எனக்கு விவாகரத்து வேண்டும் என உறுதியாகக் கூறுகிறார். அதன் பிறகு தன் அம்மாவிடம் கேட்க சொல்றதுக்கு எதுவும் இல்லை சொன்னதையே திரும்ப சொல்கிறார். இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறுகிறார்.

இந்த பக்கம் பள்ளியில் ஹேமாவும் லட்சுமியும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர். அப்போது இருவரும் வீட்டுக்கு போன விளையாட யாரும் இல்ல போரடிக்கும் எனக் கூறுகின்றனர். நாம ரெண்டு பேரும் ஒரே வீட்ல பொறந்து இருந்தா எவ்வளவு ஜாலியா இருந்திருக்கும் என சொல்லிக் கொள்கின்றனர்.

தாய் உள்ளம் கொண்டவர் சிம்பு! – Producer K.Rajan Bold Speech

வீட்டுக்கு வந்த அகிலன் அஞ்சலியை தேடுகிறார். அஞ்சலி எங்கும் இல்லாதது கண்டு வீட்டு வேலைக்கார அம்மாவிடம் கேட்டபோது அவர் கோவிலுக்கு போவதாக சொல்லிவிட்டு சென்றார் என கூறுகிறார். பிறகு அகிலன் அஞ்சலியை தேடி அலைகிறார். அஞ்சலி கோர்ட்டுக்கு வந்திருக்காது என கேட்க சௌந்தர்யாவுக்கு போன் செய்து அவர் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என போனை எடுக்கவில்லை. கடத்தப்பட்ட அஞ்சலி வலியில் துடிக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.