ஊர் மக்கள் துரத்தி அடித்ததை தொடர்ந்து கண்ணம்மா விஷயத்தில் பாரதி அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஊர் பஞ்சாயத்தில் பாரதி புருஷன் பொண்டாட்டி பிரச்சனைக்குள்ள தலையிட நீங்கெல்லாம் யாரு என கேட்க சண்முகம் பத்து வருஷம் உங்க வாழ்க்கையில நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாரு. 10 வருஷமா நீ கண்ணம்மாவை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தி இருக்கனு எல்லாம் எங்களுக்கு தெரியும். கையில இருக்க கட்ட அவுத்து விட்டோம் ஊரை விட்டு ஓடிப் போயிடு என சொல்ல பாரதி நான் ஊரை விட்டு போக மாட்டேன் என உறுதியாக கூறுகிறார்.

துரத்தி அடித்த ஊர் மக்கள்.. கண்ணம்மா விஷயத்தில் பாரதி எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

கண்ணம்மா இந்த விஷயத்துல நீ என்ன சொல்ற என கேட்க எனக்கு அவரோட பேசுவதிலும் விருப்பமில்லை அவரை பார்க்கவும் விருப்பமில்லை அவர் இந்த ஊர்ல இருக்கறதுலையும் எனக்கு இஷ்டம் கிடையாது என சொல்ல பாரதி அதிர்ச்சி அடைய ஊர் மக்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றுகின்றனர்.

பிறகு கண்ணம்மா வெளியில் செல்லும்போது கண்ணம்மா மீது ஆசை வைத்துள்ள பாண்டி என்ற நபர் உங்களை பஞ்சாயத்துல பார்த்தேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க, அந்த டாக்டர் உங்களை நெருங்க முடியாது. இந்த ஊர் திருவிழாவில் நாங்கள் கூடவே இருந்து எல்லாத்தையும் சுத்தி காட்டுறேன் என சொல்ல கண்ணம்மா உங்க வேலையை மட்டும் பாருங்க, எனக்கும் டாக்டருக்கும் இடையே இருக்க பிரச்சனையில தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என சொல்லி அசிங்கப்படுத்தி விட்டு செல்கிறார்.

துரத்தி அடித்த ஊர் மக்கள்.. கண்ணம்மா விஷயத்தில் பாரதி எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அதன் பிறகு சௌந்தர்யா பாரதிக்கு போன் போட்டு கண்ணம்மா பற்றி விசாரிக்க பாரதி கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டேன் என சொல்ல கணேசன் போனை வாங்கி இங்கு நடந்த விஷயங்களை சொல்கிறார். ஊரே உங்களுக்கு எதிரா இருக்கும்போது நீ என்ன பண்ணுவ பாரதி என கேட்க இந்த உலகமே எதிர்த்தாலும் நான் சென்னைக்கு கண்ணம்மா மற்றும் குழந்தையுடன் தான் திரும்பி வருவேன் என சொல்லி பாரதி போனை வைக்கிறார்.

துரத்தி அடித்த ஊர் மக்கள்.. கண்ணம்மா விஷயத்தில் பாரதி எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அடுத்து கண்ணம்மா ஸ்கூலில் ஹேமா மற்றும் லட்சுமிக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் ஓடி வந்து உங்களுக்கு வாடகைக்கு வீடு கொடுத்தவரோட பேத்தி மயங்கி விழுந்துட்டா என சொல்ல மூவரும் பதறி அடித்து ஓடுகின்றனர். பிறகு பூஜா அடிக்கடி மயங்கி விழும் விஷயம் கண்ணம்மாவுக்கு தெரிய வருகிறது. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.