கோர்ட்டில் பாரதி நடத்தையை தப்பாகச் சொல்ல கண்ணம்மா அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

Bharathi Kannamma Episode Update 17.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அஞ்சலி பாரதிகண்ணம்மா விவாகரத்து கிடைக்க கூடாது என வேண்டி கொள்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த விஷயத்தை சாந்தி வெண்பாவிற்கு போன் செய்து சொல்ல அவர் அஞ்சலியை கடத்துமாறு ஐடியா கொடுக்கிறார். சாந்தியை கோர்ட்டுக்கு செல்லச் சொல்கிறார். ஒருவேளை பாரதிகண்ணம்மா விவாகரத்து கிடைக்கவில்லை என்றால் அஞ்சலியை கொல்லச் சொல்கிறார்.

இந்தியா-நியூசிலாந்து மோதல் : கேன் வில்லியம்சன் விலகல்.. புதிய கேப்டனாக டிம் சவுதி..

நடத்தையை தப்பாக சொன்ன பாரதி.. கத்தியால் குத்திய கண்ணம்மா, கடத்தப்பட்ட அஞ்சலி - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அஞ்சலி சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது அவர் கடத்தப்படுகிறார். இந்த பக்கம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை தொடங்குகிறது. பாரதி எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை. இதை நான் திருமணத்திற்கு முன்னரே கண்ணம்மாவின் அப்பாவிடம் சொல்லியும் அவர் அதனை மூடி மறைத்துவிட்டார். வருண் என்பவருடன் கண்ணம்மாவுக்கு தொடர்பு உள்ளது. அவருக்கும் கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தைதான் இப்போது கண்ணம்மாவிடம் வளரும் குழந்தை. இந்த உண்மை தெரிந்து நான் இது பற்றிக் கேட்டதும் உத்தமி மாதிரி பேசி வீட்டை விட்டு கிளம்பி விட்டாள் என ஆதாரத்தை கொடுக்கிறார்.

இதுகுறித்து கண்ணம்மாவிடம் நீதிபதி கேட்க தன்னுடைய நடத்தையைப் பற்றி தப்பாக சொன்ன பாரதியை கத்தியால் குத்துகிறார். சௌந்தர்யா அலரி எழுந்து நிற்க அதன் பிறகு தான் தெரிகிறது இது அவருடைய கனவு என்று. பிறகு மேலும் சௌந்தர்யாவிடம் என்னாச்சு என கேட்டு அவரை வெளியே அழைத்துச் செல்கிறார். வெளியே பாரதி வழக்கறிஞரிடம் விவாகரத்து கிடைக்குமா கிடைக்காதா என பேசிக் கொண்டிருக்கும் போது அவர் கண்ணம்மாவுக்கு பல பேருடன் தொடர்பு இருப்பதாக உறுதியா சொல்றீங்க நான் விவாகரத்து வாங்கி தருகிறேன் என சொல்கிறார். பாரதி கடுப்பாகி எனக்கு என்ன சொல்லணும்ன்னு தெரியும் நீ விவாகரத்து வாங்கித்தர வேலைய மட்டும் பாரு என கூறுகிறார்.

Cooku With Comali புகழாக பார்க்காதீங்க – Santhanam வேண்டுகோள்..! 

இந்த பக்கம் அஞ்சலி யாருடா நீங்க என்னை எதுக்கு கடத்தனீங்க என சப்தமிட்டு கொண்டிருக்கிறார். மாயாண்டி அஞ்சலிக்கு என்னை நன்றாகத் தெரியும் அவளுடைய முகத்தை மூடு நான் வருகிறேன் என சொல்ல அஞ்சலியின் முகத்தை மூடுகிறார்கள். அஞ்சலி கடத்தப்பட்டதை போட்டோ எடுத்து வெண்பாவிற்கு அனுப்புகிறார் மாயாண்டி. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.