லட்சுமியிடமிருந்து ஹேமாவை பிரிக்க முயற்சி செய்ய ஹேமா சொன்ன வார்த்தையால் அதிர்ச்சடைந்துள்ளார் பாரதி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ஹேமா போர் அடிக்குது என வீட்டில் உள்ளவர்களிடம் போனை கேட்டுக் கொண்டிருக்க அப்போது ஷர்மிளா வீட்டுக்கு வந்து வெண்பா இருந்துச்சு அழைப்பு விடுக்கிறார். அனைவரும் குடும்பத்தோடு வந்து நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

லட்சுமியிடமிருந்து ஹேமாவை பிரிக்க முயற்சிக்கும் பாரதி.. கடைசியில் ஹேமா கொடுத்த அதிர்ச்சி - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் பாரதி ஹாஸ்பிடலில் பிஸியாக இருக்க அப்போது ரூமுக்குள் வந்த கண்ணம்மா எதுக்கு ஹேமாவை ஸ்கூலுக்கு அனுப்பல. லட்சுமி நீங்க தான் என்னுடைய அப்பா என்ற விஷயத்தை ஹேமாவிடம் சொல்லிவிடுவார் என பயந்து அனுப்பவில்லையா? என்னிடமிருந்து ஹேமாவை பிரிக்க சதி செய்கிறீர்களா என சத்தம் போட பாரதி அவ என்னுடைய பொண்ணு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் வெளியே போ என கோபப்படுகிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த பாரதி ஹேமாவிடம் அப்பாவை பற்றி யார் ஏதாவது தப்பு சொன்னாலும் அதை நீ நம்ப கூடாது. உன்னையும் என்னையும் பிரிக்க மிகப்பெரிய சதி நடக்குது என கூறுகிறார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு என ஹேமாவிடம் சத்தியம் வாங்குகிறார்.

இந்த பக்கம் ஷர்மிளா சௌந்தர்யாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து அவரிடம் பேசிக் கொண்டிருக்க ரோஹித் ரூமுக்கு சென்று வெண்பாவுக்கு பால் எடுத்துச் சென்று கொடுக்கிறார். நாளைக்கு நமக்கு நிச்சயதார்த்தம் அதுக்கப்புறம் நீ எனக்கு பாதி பொண்டாட்டி என ரோஹித் பேசிக் கொண்டிருக்க கோபப்படும் வெண்பா பாலை தட்டி விட்டு கண்ணாடியை உடைத்து விடுகிறார்.

லட்சுமியிடமிருந்து ஹேமாவை பிரிக்க முயற்சிக்கும் பாரதி.. கடைசியில் ஹேமா கொடுத்த அதிர்ச்சி - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இதனால் சத்தம் கேட்டு மேலே பதறி அடித்து சௌந்தர்யாவும் ஷர்மிளாவும் ஓடுகின்றனர். வெண்பாவிடம் என்ன ஆச்சு எதுக்கு இப்படி நடந்துக்கிற என கேட்க இத நிச்சயதார்த்தமே வேண்டாம் நிறுத்துங்க என கூறுகிறார். ரோஹித் அழுது டிராமா போட அவரை வெளியே இருக்க சொல்லி ஷர்மிளா உனக்கு என்னாச்சு என வெண்பாவை கேட்கிறார். நீ எனக்கு பண்ணி கொடுத்த ப்ராமிஸ் மறந்து போச்சா என கேட்க அப்படியே ப்ளாஸ் பேக். அதாவது வெண்பா ஜெயிலிலிருந்து வெளியே எடுக்க ஷர்மிளா முயற்சி செய்தபொழுது அப்போது நான் சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிப்பேன் என வெண்பா சத்தியம் செய்தது தான் அந்த ஃபிளாஷ்பேக். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.