பாரதி வைத்த கோரிக்கைக்கு கண்ணம்மா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ‌ இன்றைய எபிசோடில் ஹேமா ஸ்கூலில் லட்சுமியிடம் உனக்கு சமையலம்மா தான் என்னுடைய அம்மா என்று தெரிந்தும் என் என்கிட்ட சொல்லல என கோபப்படுகிறார். என்கிட்ட பேசாத என சத்தம் போடுகிறார்.

பாரதி வைத்த கோரிக்கை.. கண்ணம்மா சொன்ன ஐடியா, கடும் கோபத்தில் ஹேமா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்ததாக பாரதி ஹாஸ்பிடலில் யோசனையில் இருக்க அப்போது கிளினிக்கில் இருந்து போன் செய்து மெஷின் ரிப்பேர் சரியாகிவிட்டது இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ரிப்போர்ட் கிடைத்து விடும் என சொல்கின்றனர். பாரதி பேசி முடித்த பிறகு கண்ணம்மா உள்ளே வர அவளிடம் உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டும் என சொல்லி ஹேமாவை என்கிட்ட திரும்ப கொடுத்துடு என கேட்க அது முடியாது என கண்ணம்மா கூறுகிறார்.

பிறகு கண்ணம்மா நான் ஒரு வழி சொல்லட்டுமா அப்படியே எழுந்து வந்துடுங்க நம்ம வீட்டுக்கு போகலாம் பழசு எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா வாழ்க்கையை தொடங்கலாம் குழந்தைங்க கூட சந்தோஷமா இருக்கலாம் என சொல்ல பாரதி டெஸ்ட் வராமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என முடிவெடுத்து என்னால கண்மூடித்தனமாக எதையும் நம்ப முடியாது என சொல்ல அப்போ நீங்க கண்ண மூடிக்கிட்டு இருங்க என்னால இது மேல எதுவும் பண்ண முடியாது என சொல்லி கண்ணம்மா வெளியே கிளம்பி விடுகிறார்.

பாரதி வைத்த கோரிக்கை.. கண்ணம்மா சொன்ன ஐடியா, கடும் கோபத்தில் ஹேமா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

வீட்டில் லட்சுமி ஹேமாவிடம் பேச முயற்சி செய்ய என்கிட்ட பேசாத என்னை தனியா விடு என சொல்லி கோபப்பட்டு எழுந்து வெளியே சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.