ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு செல்ல விடாமல் சௌந்தர்யா தடுக்க பாரதி நீ போய்ட்டு வா என அனுப்பி வைக்கிறார்.

Bharathi Kannamma Episode Update 14.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு ஹேமா என்னுடைய மகள் தான் என சந்தேகம் வந்துள்ள நிலையில் சீரியல் விறுவிறுப்படைந்து வருகிறது.

கண்ணம்மாவுக்கு ஹேமா தன்னுடைய மகள் என சந்தேகம் வந்துள்ளது. இந்த நிலையில் இன்று லஷ்மிக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டு இதுகுறித்து யோசிக்கிறார் கண்ணம்மா.

சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு..

ஹேமாவை கண்ணம்மா வீட்டிக்கு செல்லவிடாமல் தடுக்கும் சௌந்தர்யா, பாரதிக்கு வந்த சந்தேகத்தால் எடுத்த முடிவு - பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்

அதன் பின்னர் சௌந்தர்யா விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்க அப்போது பாரதி வந்துவிடுகிறார். என்ன ரகசியமா பேசுவீங்களா என கேட்க ஆகில் இல்ல இ பைக் வாங்கலாம் பேசிட்டு இருந்தோம் என கூறுகிறார். பின்னர் ஹேமா கையில் இரண்டு பையுடன் அங்கு வருகிறார்.

லஷ்மி வீட்டுக்கு போய்ட்டு அவளுக்கு வாங்கின டிரஸ் கொடுக்கப் போகிறதா கூறுகிறார் ஹேமா. முதலில் பாரதி வேண்டாம் என கூறுகிறார். பின்னர் சௌந்தர்யாவும் இந்த நேரத்துல ஹேமா கண்ணம்மா வீட்டுக்கு போறது நல்லா இருக்காது என ஹேமாவை வேண்டாம் என கூறுகிறார்.

அனைவரையும் கலாய்த்து தள்ளிய தயாரிப்பாளர் Ravinder Chandrasekar! 

இதனால் பாரதிக்கு சந்தேகம் வரவே அவர் வேண்டுமென்றே ஹேமாவை போய்ட்டு வருமாறு அனுப்பி வைக்கிறார். இன்னொரு பக்கம் வெண்பா இந்த இரட்டை குழந்தை பற்றி சாந்தியிடம் கூறி கவலைப்படுகிறார். நல்லா ஏமாந்துட்டேன் என கூறுகிறார்.

மறுபுறம் அந்த குறி சொல்லும் பெண்மணி மீண்டும் அஞ்சலியை தேடி வந்து அவருக்கு ஒரு பரிகாரத்தை கூறிவிட்டு செல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்.