பாரதியிடம் ரோகித் சில கேள்விகளைக் கேட்க கடைசியில் அவருக்கு கண்ணம்மா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் பாரதி ஹேமா குறித்து யோசித்துக் கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த கண்ணம்மா அவருக்கு சாப்பாடு பரிமாறுகிறார். யாரைக்கேட்டு இதெல்லாம் பண்ற என பாரதி கோபப்பட சாப்பிடுங்க ஹேமா எங்கப்பா சரியா வீட்டுக்கு வரது இல்ல என்கிட்ட பேசறது இல்ல அவர் சாப்பிட்டார் என்று கூட தெரியல என்று அவளுக்காக சாப்பிடுங்க என கூறுகிறார். பிறகு பாரதியும் ஒருவழியாக சாப்பிடுகிறார்.

பாரதியிடம் ரோஹித் கேட்ட கேள்வி.. கண்ணம்மா கொடுத்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் சாந்தி வெண்பாவிடம் ரோஹித்தை திருமணம் செய்துகொண்டு நல்லபடியா வாழுங்க என சொந்த வெண்பா கோபப்பட்டு சாந்தியை திட்டி அனுப்பி வைத்தார். பிறகு ரோஹித் பாரதியை சந்தித்து அவரை வெண்பாவுக்கும் தனக்கும் நடக்கவுள்ள திருமண பங்ஷனுக்கு வரவேற்கிறார். பிறகு பாரதியிடம் சில கேள்விகளை கேட்க போவதாக சொல்ல என்ன கேட்கப் போகிறார் என தெரியாமல் பாரதி தவிக்க வெண்பாவுக்கு பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள் குறித்து கேட்கிறார்.

அதன் பின்னர் கண்ணம்மாவை சந்தித்து பாரதியின் மனைவியை உங்களுக்கு தெரியுமா அவரை சந்தித்து ஒரு விஷயம் பேசவேண்டும் அவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என கேட்க அந்த கண்ணம்மாவே நான்தான் என சொல்ல ரோஹித் அதிர்ச்சி அடைகிறார்.

பாரதியிடம் ரோஹித் கேட்ட கேள்வி.. கண்ணம்மா கொடுத்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்

பிறகு கண்ணம்மாவையும் அந்த பங்ஷனுக்கு அழைக்க அவர் கண்டிப்பாக வருகிறேன் என வாக்கு கொடுக்கிறார். மேலும் உன்னுடைய திருமணம் குறித்து எந்த உதவியாக இருந்தாலும் என்னிடம் தயக்கமில்லாமல் கேளு, கண்டிப்பாக நான் செய்கிறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.