ரோகித் திருமணத்தை நிறுத்தி விடலாம் என சர்மிளாவிடம் கூறுகிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ரோஹித் அப்பாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனக்கும் வேறு வழியில்லை இந்த கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என சொல்ல சர்மிளா அதிர்ச்சியாக வெண்பா மகிழ்ச்சி அடைகிறார். என்ன மாப்ள சொல்றீங்க ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க எனக்கு கேட்க பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் எடுத்து ரோகித் இப்போதைக்கு என்கிட்ட இது தவிர வேறு எதுவும் இல்லை நான் ஒரு பிச்சைக்காரன் என கூற நான் இருக்கும் போது நீங்க எதுக்கு இப்படி சொல்றீங்க என பையில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் எடுத்து இதை இந்த பாக்கெட் மணியா வச்சுக்கோங்க என கொடுக்கிறார். இதனால் வெண்பா அதிர்ச்சி அடைந்து நான் ஒரு பிராடு என சொல்ல ஷர்மிளா எனக்கு மாப்பிள்ளையை பற்றி தெரியும் என கூறுகிறார்.

திருமணத்தை நிறுத்த சொல்லும் ரோஹித்.. கண்ணம்மாவிடம் இருந்து ஹேமாவை பிரிக்க பாரதி எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு வீட்டில் ஹேமா ஸ்கூலுக்கு தயாராகி கொண்டு இருக்க அங்கு வந்த பாரதி இன்னைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம் நான் சொல்ற வரைக்கும் நீ வீட்ல தான் இருக்கணும் என கூறுகிறார். வீட்டில் உள்ள எல்லோரும் இது பற்றி கேட்க அவர்களிடம் கோபமாக பேசிவிட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி விடுகிறார் பாரதி. லட்சுமி ஹேமாவிற்காக காத்திருந்து ஏமாந்து போகிறார். அதன் பிறகு வேணும் மீண்டும் இருமல் வந்து ரத்த வாந்தி எடுக்க இது சௌந்தர்யாவுக்கு தெரியக்கூடாது என ரூமை லாக் செய்து டிவி சத்தத்தை அதிகமாக வைக்கிறார்.

திருமணத்தை நிறுத்த சொல்லும் ரோஹித்.. கண்ணம்மாவிடம் இருந்து ஹேமாவை பிரிக்க பாரதி எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு சௌந்தர்யா ரூமுக்கு வந்து என்ன ஆச்சு என கேட்க எதையெதையோ சொல்லி சமாளித்து விடுகிறார். மழையில் லட்சுமி கண்ணம்மாவை பார்க்க போன இடத்தில் ஹேமா ஸ்கூலுக்கு வரவில்லை என சொல்ல கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் போடு நடந்த விஷயத்தை சௌந்தர்யா கூறுகிறார். லட்சுமி பாரதி தான் என்னுடைய அப்பா என்ற உண்மையை ஹேமாவிடம் சொல்லிவிடுவாள் என்பதற்காக அவர் இப்படி எல்லாம் செய்கிறார் என போனை வைத்த கண்ணம்மா இதை பாரதியிடமே நேராக பேசிவிட வேண்டியதுதான் என முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.