பார்க்க வந்த பாரதிக்கு ஹேமாவும் லட்சுமியும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்திருக்கும் விஷயத்தை அகிலனிடம் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகுதான் வெண்பா எழுத்தில் தாலி கட்ட வேண்டும் என முடிவு செய்திருந்தேன் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை என்னை அந்த இடத்தில் நிறுத்தி விட்டது என சொல்ல அகிலன் அதை நம்பாமல் இருக்க டெஸ்ட் கொடுத்த கிளினிக்கு போன் போட்டு இதை நிரூபிக்கிறார்.

பார்க்க வந்த பாரதிக்கு ஹேமா லட்சுமி கொடுத்த அதிர்ச்சி.. வெண்பாவுக்கு கண்ணம்மா கொடுத்த பதிலடி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து வெண்பா ஹாஸ்பிடல் ஏசி கூலிங்காக இல்லை என கம்பெனியில் செய்திருக்க பிறகு கண்ணம்மா வந்து சரி செய்தாச்சு இப்போ ஜில்லுனு இருக்கா என கேட்டுவிட்டு வெளியே செல்ல வெண்பா ஏன் நில்லுடி என அடி போட்டு நக்கலாக பேச கண்ணம்மா அதற்கு ஏற்றார் போல பதிலடி கொடுக்கிறார். வெண்பா இன்னும் எதுவும் முடியல இனிமேதான் உன் வாழ்க்கையில நீ மோசமான சம்பவங்களை பார்க்க போற என சொல்ல என்னோட வாழ்க்கையில வெண்பா சாப்டர் க்ளோஸ். நீ செத்த பாம்புக்கு சமம் உன்னை ஒரு மனுஷியாவே நான் மதிக்கிறது இல்ல என பதிலடி கொடுக்கிறார் கண்ணம்மா.

அடுத்ததாக பாரதி ஹேமாவை பார்க்க ஸ்கூலுக்குப் போக ஹேமா எனக்கு உங்களை பார்க்க பிடிக்கல உங்ககிட்ட பேச பிடிக்கல தயவு செஞ்சு எங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க என சொல்லிவிட்டு சென்றுவிட பிறகு லட்சுமி இருந்து நீங்க இங்க எங்களை பார்க்க வராதீங்க டாக்டர் அப்பா. திரும்பத் திரும்ப நீங்க வந்தா நாங்க அம்மாகிட்ட சொல்லி வேற ஸ்கூல்ல சேர்த்து விட சொல்லிடுவோம் என சொல்ல பாரதி அங்கிருந்து கண் கலங்கி கிளம்பி விடுகிறார்.

பார்க்க வந்த பாரதிக்கு ஹேமா லட்சுமி கொடுத்த அதிர்ச்சி.. வெண்பாவுக்கு கண்ணம்மா கொடுத்த பதிலடி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்ததாக ஷர்மிளா மற்றும் ரோஹித் ஹாஸ்பிடல் வர ஷர்மிளா வெண்பாவை கண்டபடி திட்ட ரோஹித் அவள திட்டாதீங்க. அடுத்த வருஷம் இதே நேரத்தில் உங்ககிட்ட ஒரு ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ கொடுத்து உங்க மேல உச்சா போக வைப்பேன் என சபதம் எடுக்க வெண்பா யார்ரா நீ எங்கிருந்து வந்த என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.