கூட்டத்தில் வைத்து பாண்டிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் கண்ணம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவின் அப்பா நீ உன் புருஷனோட சேர்ந்து வாழ், நம்ம இந்த ஊரை விட்டு போயிடலாம் என சொல்லி ஒரு முழுவதும் கண்ணம்மாவை பாண்டியின் வப்பாட்டி என பேசும் பேச்சை பற்றி சொல்ல கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார்.

கூட்டத்தில் வைத்து பாண்டிக்கு அதிர்ச்சி கொடுத்த கண்ணம்மா, நடந்தது என்ன? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு அந்தப் பாண்டிக்கு இருக்கு என சொல்லி கண்ணம்மா கோபமாக கிளம்ப மறு பக்கம் பாரதி கணேசனிடம் ஏன் அவங்க அப்படி பேசுறாங்க என்ன பேசுறாங்க கண்ணம்மா பத்தி தப்பா சொல்றாங்க என கேட்க கணேசன் முகம் மாறுகிறது. இந்த நேரத்தில் தாமரை வந்து நடந்த விஷயங்களை சொல்ல அந்த பாண்டிக்கு இருக்கு என பாரதி மறு பக்கம் கோபமாக கிளம்பி செல்கிறார்.

அப்போது கண்ணம்மா எதிரே வரும் பாண்டியின் நண்பன் ஒருவன் பாண்டி மேலே கைய வெச்ச அவன் உன் மேல கை வைக்காம மூச்சுக்காத்து படாமலேயே உன்ன வப்பாட்டியா ஆக்கிட்டான் இதுதான் ஆம்பள பவர் என சொல்ல கண்ணம்மா ஆம்பள பவர் என்னன்னு நீ சொல்லிட்ட பொம்பள பவர் என்னன்னு நான் காட்டுறேன்‌. பாண்டி மேலே கை வைக்காமலேயே அவனை மிரட்டாமலேயே நடந்த எல்லா விஷயத்தையும் சொல்ல வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள். இதைப் பார்த்த பாரதி சந்தோஷப்படுகிறார்.

கூட்டத்தில் வைத்து பாண்டிக்கு அதிர்ச்சி கொடுத்த கண்ணம்மா, நடந்தது என்ன? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு குஸ்தி போட்டியில் பாண்டி ஜெயித்ததாக அறிவிக்க அப்போது அவன் மூணு வருஷமா தொடர்ந்து நான் தான் ஜெயிச்சுட்டு இருக்கேன் இனியும் நான் தான் ஜெயிப்பேன் என்னை எதிர்த்து சண்டை போட எவனுமே இல்லையா? இந்த சுத்து பட்டு கிராமத்துல ஆம்பளயே கிடையாதா? என கேட்க அப்போது கண்ணம்மா கை தட்டியபடி என்ட்ரி கொடுக்கிறார்.

அதன் பிறகு எல்லோரும் கண்ணம்மாவை தப்பு தப்பாக சொல்ல ஆமா பாண்டி என்ன வெச்சிட்டு இருக்குறது உண்மைதான் என சொல்கிறார். ஆனா அதைவிட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும், பாண்டி என்னமோ என் மேல ஆசைப்பட்டு தான் வந்தாரு ஆனா அவர் உண்மையான ஆம்பள கிடையாது. ஆம்பளைன்னா வெறும் நாலு பேர தூக்கி போட்டு அடிக்கிறது கிடையாது, அது வேற விஷயம். அது பாண்டிக்கு கிடையாது என சொல்ல எல்லோரும் என்ன இந்த பொண்ணு இப்படி சொல்லுது என அதிர்ச்சி அடைகின்றனர்.

கூட்டத்தில் வைத்து பாண்டிக்கு அதிர்ச்சி கொடுத்த கண்ணம்மா, நடந்தது என்ன? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இதனால் பாண்டி அதிர்ச்சியாகி நிற்கிறான். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.