பாரதி எடுத்த முடிவால் செய்வதறியாது தவித்து வருகிறார் கண்ணம்மா.

Bharathi Kannamma Episode Update 11.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சௌந்தர்யா வீட்டுக்கு போன கண்ணம்மா பாரதிக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன். அவர் எந்த கோர்ட்டுக்கு வேணாலும் போகட்டும். ஆனால் நான் விவாகரத்து தர மாட்டேன். ஒருவேளை விவாகரத்து கிடைத்துவிட்டால் ஹேமாவை இங்கே விட மாட்டேன் என கூறி விட்டு வீட்டிற்கு கிளம்புகிறார்.

பிறகு பாரதி ரூமில் இருந்து கதவை தட்ட சௌந்தர்யா கதவைத் திறக்க பாரதி என்ன அந்த கண்ணம்மா வந்தாளா? என்ன சொன்னா உங்க பையன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்காரு எப்படியாச்சும் என்னை அவரோடு சேர்த்து வைங்க என சொன்னாளா என்று கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை அவ கோர்ட்டுல பதில் சொல்ல தானே போறா பார்த்துக்கோ என சௌந்தர்யா கூறிவிடுகிறார்.

கேப்டன் பதவிக்கு, ரோகித் பொருத்தமானவரா? : கவாஸ்கர் பதில்

இந்தப் பக்கம் வீட்டுக்கு போன கண்ணம்மா வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து இதுகுறித்து கேட்கிறார். எட்டு வருடமாக பிரிந்து வாழும் உங்களுக்கு விவாகரத்து எளிதில் கிடைத்துவிடும் என சொல்ல கண்ணம்மா வேறு வழி இல்லையா என கேட்க வேறு வழியே இல்லை என வழக்கறிஞர் கூறிவிடுகிறார்.

Simbu ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் Massive update – கொண்டாட தயாராகுங்கள்! | Maanaadu

வீட்டில் அஞ்சலியும் அகிலனும் இந்த பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருக்க அகிலன் உங்க அப்பாவுக்கு போன் பண்ணி நடந்ததை சொல்லு அதுதான் நல்லது என கூறுகிறார். அஞ்சலியும் போன் செய்து நடந்த விஷயத்தைச் சொல்ல உடனே அவர் சௌந்தர்யா வீட்டுக்கு வந்து சௌந்தர்யாவிடம் என்ன ஏது என கேட்கிறார். நானும் உங்கள மாதிரி எதுவும் செய்ய முடியாமல் தான் இருக்கிறோம் என சௌந்தர்யா கூறுகிறார். கண்ணம்மாவுக்கு பெறாத அம்மாவாக இருக்கிறேன் என கூறுகிறார். கண்ணம்மாவை காப்பாற்ற ஏதாவது செய்யுங்கள் என அவருடைய அப்பா சொல்ல பாரதி தன்னிடம் சத்தியம் வாங்கி விட்டதாக கூறுகிறார். கண்ணமா தலையெழுத்து என்னவோ அதன்படி நடக்கட்டும் நீங்க கிளம்புங்க என கூறுகிறார் சௌந்தர்யா.

இதனால் வருத்தத்துடன் வீட்டிற்கு கிளம்புகிறார் அவருடைய அப்பா. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.