உண்மையை தெரிந்ததும் ஹேமா எடுத்த முடிவால் பாரதி பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமாவிடம் மற்ற உண்மைகளையும் போட்டு உடைத்துள்ளார் கண்ணம்மா. நீ என்னுடைய பொண்ணு தான் இது சத்தியம் சத்தியம் சத்தியம் என சொல்ல ஹேமா பாட்டி சமையலமா சொல்றது உண்மையா என கேட்க ஆமாம் இவ்வளவு நாளா நாங்க தான் பொய் சொல்லிட்டு இருந்தோம் என கூறுகிறார்.

உண்மையைத் தெரிந்ததும் ஹேமா எடுத்த முடிவு.. பாரதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஹேமா அப்படியே வரிசையாக எல்லோரிடமும் கேட்க எல்லோரும் ஆமாம் என கூறுகின்றனர். பிறகு சமையல் அம்மா என கண்ணம்மாவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார் ஹேமா. அதன் பிறகு இனிமே உங்கள சமையல் அம்மான்னு கூப்பிட மாட்டேன் அம்மான்னு தான் கூப்பிடுவேன் நான் அனாதை கிடையாது என அம்மா எனக்கு கூப்பிட்டு தன்னை தூக்கி கொஞ்சுமாறு கூறுகிறார். கண்ணம்மாவும் ஹேமாவை தூக்கி கொஞ்சுகிறார்.

அதன் பிறகு ஹேமா வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் என சொல்ல கண்ணம்மா நீங்க தான் இருக்கணும் உனக்கு சித்தப்பா சித்தி தாத்தா பாட்டி என எல்லோரும் இருக்காங்க என சொல்ல எல்லாரும் அம்மாவோட தானே இருப்பாங்க அப்போ நான் மட்டும் எதற்கு இங்கே இருக்கணும் என்னால இருக்க முடியாது என ஹேமா சொல்கிறாள்.

பிறகு நான் எங்க அம்மாவோட போகக்கூடாதா என கேட்க எல்லோரும் கண்ணம்மாவுடன் செல்ல சம்மதம் தெரிவித்து விட பாரதி மட்டும் என்னை விட்டு போயிடாத ஹேமா என கெஞ்ச என்னால இங்க இருக்க முடியாது நான் உங்களை மறக்க மாட்டேன். எப்ப உங்களோட இருக்கணும்னு தோணுதோ அப்போ நான் வந்து உங்களோட இருப்பேன். இப்ப என்ன போக விடுங்க என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள்.

உண்மையைத் தெரிந்ததும் ஹேமா எடுத்த முடிவு.. பாரதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

கண்ணம்மா ஹேமா லட்சுமி என முழுவதும் ஆட்டோவில் கிளம்ப பாரதி கண்கலங்கி நிற்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.