கண்ணம்மா கொடுத்த அதிர்ச்சியால் பாரதி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு லட்சுமி அப்பா என சொன்னதால் வீட்டுக்கு வந்து சௌந்தர்யாவுடன் சண்டை இடுகிறார். இன்னும் என்னவெல்லாம் பிளான் பண்ணி வச்சிருக்கீங்க எதுக்கு அந்த குழந்தைகிட்ட என்ன ஒரு வில்லனா சித்தரிக்கிறீங்க? குடும்பமா இது சாக்கடை. இன்னும் எவ்வளவுதான் என் முதுகுல குத்த காத்துகிட்டு இருக்கீங்க என்ன எரிந்து விழுகிறார்.

எகிறிய பாரதி.. கடைசியில் கண்ணம்மா கொடுத்த அதிர்ச்சி, பரபரப்பாகும் சீரியல் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்தப் பக்கம் லட்சுமி சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க அங்கு வந்த ஹேமா டாடி வந்தாரு நீ பார்த்தியா சமையலமா வந்தாங்களா நான் பார்க்கவே இல்லை என கேட்க அம்மா வரல என கூறுகிறார் லட்சுமி. சொல்லியிருந்தா டாடியை நான் சார் கிட்ட உனக்காக பேச சொல்லி இருப்பேன் நான் சொல்லி இருந்தா கண்டிப்பா டாடி கேட்டு இருப்பாரு என ஹேமா கூறுகிறார். மேலும் என் அம்மா போட்டோவை பாத்தியா ரொம்ப அழகா இருக்காங்க நைட்டு முழுக்க அவங்க போட்டோவ பக்கத்துல வச்சுக்கிட்டு தான் தூங்குனேன் என கூறுகிறார். உனக்கு சீக்கிரமா அப்பா கிடைப்பாங்க என ஹேமா கூறுகிறார். டாக்டர் அப்பா தான் என்னுடைய அப்பா என சொல்ல வந்த லட்சுமி அப்படியே மூடி மறைத்து விடுகிறார்.

இந்த பக்கம் சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் போட்டு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சடைகிறார். அவளும் எவ்வளவு நாளைக்கு தான் உண்மைகளை மனசுல வச்சுக்கிட்டு இருப்பா? என்ன மாதிரி அவளும் உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டு இருப்பார் என கண்ணம்மா கூறுகிறார். சௌந்தர்யா எல்லாம் நல்லதுக்கு தான் சரி விடு பார்த்துக்கலாம் என கூறுகிறார்.

அதன் பின்னர் ஹாஸ்பிடலுக்கு வந்த பாரதி கண்ணம்மா வைக்காதீனுக்கு வரவைத்து லட்சுமி இடம் எதற்கு நான் தான் அப்பானு சொல்லி வச்சிருக்க யார் அப்பனோ அவன காட்ட வேண்டியது தானே என கோபப்படுகிறார். இனிமே லட்சுமி என்ன எங்கேயும் அப்பான்னு கூப்பிடக்கூடாது அவ கிட்ட சொல்லி வை என சொல்ல நான் அவகிட்ட அதெல்லாம் சொல்ல முடியாது இனி எங்க பார்த்தாலும் உங்களை அப்பானு தான் சொல்லி கூப்பிட சொல்லுவேன் என்ன பண்ணுவீங்க என பேசுகிறார். மேலும் ஹேமா நான் பெத்த பொண்ணு. என்கிட்ட இருந்து பிரிக்க நினைச்சா நான் அவளை உங்ககிட்ட இருந்து நிரந்தரமா பிரிச்சிடுவேன் அதுக்காக எந்த எல்லைக்கும் நான் போக தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறார்.

எகிறிய பாரதி.. கடைசியில் கண்ணம்மா கொடுத்த அதிர்ச்சி, பரபரப்பாகும் சீரியல் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

ஹேமா என் பொண்ணு என பாரதி சொல்ல அவ உங்க பொண்ணு தான் நான் இல்லன்னு சொல்லல அதே சமயம் என்னுடைய பொண்ணும் தான், என் நம்மளுடைய பொண்ணு அதை மறந்துடாதீங்க எனக் கூறிவிட்டு வெளியே செல்கிறார். என்ன இவ இன்னைக்கு ஓவரா பேசுற நாம என்ன பண்றது என பாரதி யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.