கண்ணம்மா வீட்டில் பாரதிக்கு வந்த சோதனையும் அவர் திடீரென ஹேமா அழுவது கேட்டு வீட்டிற்கு கிளம்புகிறார்.

Bharathi Kannamma Episode Update 06.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஆப்பம் செய்து வைத்த கண்ணம்மா பாரதியை சாப்பிட சொல்ல அவர் எனக்கு ஒன்றும் வேண்டாம் நான் ஆடர் செய்து கொள்கிறேன் என சொல்ல அப்போ என் சாப்பாட்டை சாப்பிட்டால் என்கிட்ட மயங்கிடுவீங்கனு பயப்படுறீங்க அப்படித்தானே என கேட்கிறார். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க ஒன்னு புரிஞ்சிக்காத என பாரதி கூறுகிறார். நான் ஒன்னும் புரிஞ்சுக்கல நீங்களா சாப்பிடுங்க என கண்ணம்மா சொல்ல பாரதி கேட்கவில்லை. மொபைலில் ஃபுட் ஆர்டர் செய்ய முயற்சி செய்ய ஆர்டர் செய்ய முடியவில்லை. அதன்பிறகு கண்ணம்மாவிடம் நான் சாப்பிடுகிறேன் ஆனால் ஒரு கண்டிஷன் என கூறுகிறார். கண்ணம்மா என்ன எனக் கேட்க நான் சாப்பிடுவதற்கு காசு கொடுத்து விடுவேன் நீ அதை வாங்கிக்கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

2 டோஸ் தடுப்பூசியில், நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லையா? : மத்திய அரசு புதிய முடிவு

கண்ணம்மா வீட்டில் கடைசியில் பாரதிக்கு வந்த சோதனை.. நடு இரவில் கேட்ட அழுகை குரல் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

எல்லார் வீட்டிலேயும் மளிகை சாமான் வாங்க புருஷங்க தான் காசு தருவாங்க. ஆனா இங்க வித்தியாசமா சாப்பிடுவதற்கு காசு தராங்க என கூறுகிறார். கண்ணம்மா சரி என சொல்ல பாரதி சாப்பிடுகிறார். அவருக்கு பிடித்த ஆப்பம் தேங்காய்ப்பால் என்பதால் அளவுக்கு அதிகமாகவே சாப்பிடுகிறார். பிறகு அரை நாள்தான் இங்கேயே இருப்பேன் அதற்குள்ள நீயே போக சொல்லி விடுவேன் என சுவற்றில் 6 நாட்களுக்கான அட்டவணையை போட்டு அதில் சாப்பிட்ட அதற்கான விவரங்களை குறித்து வைக்கிறார். கண்ணம்மா ஆறுநாள் இருக்கீங்களா இல்ல ஆறுமாதம் இருக்கீங்களானு பார்க்கலாம் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். ‌‌

பிறகு பாரதி அமர்ந்து கொண்டிருக்க அப்போது வந்த கண்ணம்மா உங்களிடம் ஒன்னு கேட்கணும் என கூறுகிறார். பயப்படாதீங்க சண்டை போடுற மாதிரி எதுவும் கேட்க மாட்டேன் என சொல்லிவிட்டு எப்படி நீங்க ஆறுமாதம் சேர்ந்து வாழ ஒத்துக்கிட்டீங்க என கேட்கிறார். இல்ல ஒரே வீட்ல இருக்கும் ஒருத்தர் மீது ஒருத்தர் பாத்துகிட்டு சும்மா பேசாம இருக்க முடியாது. நீங்களும் எவ்வளவு நேரம்தான் அந்த மொபைலை நோண்டிக் கொண்டே இருப்பீர்கள் என கண்ணம்மா கேட்க ஆறு நாள் கழித்து போகும்போது இதுக்கு பதில் சொல்கிறேன் என கூறுகிறார்.

ஏழு படம் நடிச்சு முடிச்சுட்டேன் – எல்லாரையும் கலாய்த்து தள்ளிய Pugazh

கண்ணம்மா வீட்டில் கடைசியில் பாரதிக்கு வந்த சோதனை.. நடு இரவில் கேட்ட அழுகை குரல் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்

பிறகு உள்ளே சென்ற கண்ணம்மா பனங்கற்கண்டு போட்ட பாலை எடுத்து வந்து கொடுக்கிறார். இதையும் கணக்கில் வச்சிக்கோங்க என அந்த அட்டவணையில் குறித்து விடுகிறார் கண்ணம்மா. பிறகு பாய் தலையணை எடுத்து வந்து வெளியில் போட்டு கண்ணம்மா படுத்துக் கொள்கிறார். நீங்க போய் உள்ள தூங்குங்க. நான் இங்க படுத்துகிறேன் என கூறுகிறார். பாரதி இல்ல நான் இங்க படுத்துகிறேன் என சொல்லியும் கண்ணம்மா பரவால்ல நீங்க போய் நல்லா தூங்குங்க என கூறுகிறார். சரி என பாரதியும் படுக்கச் சென்று விடுகிறார்.

இந்த பக்கம் சாந்தி பாரதி சொன்னதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அவர் வெண்பா அம்மாவுக்கு இப்படி துரோகம் செய்து விட்டார் என மாயாண்டி கிட்ட சொல்லி அழுகிறார். மாயாண்டி வெண்பா பீட்டர் சரியா என கேட்க வேண்டாம் அவங்களுக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க என கூறுகிறார். அடுத்ததாக இந்தப் பக்கம் அஞ்சலி மற்றும் அகிலன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க மீண்டும் அஞ்சலி நான் இதற்காகத்தான் என் உயிர் போனாலும் பரவாயில்லை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என துணிந்தேன் என சொல்கிறார். உடனே கோபமான அகிலன் நீ மட்டும் இல்லாம நான் எப்படி இருப்பேன் என பேசுகிறார். உன்ன கடத்தல் அவங்க யாராக இருந்தாலும் அவர்களை சும்மா விடமாட்டேன் என சத்தம் போடுகிறார். இந்த நேரத்தில் குழந்தை எழுந்து கொள்ள பிறகு இருவரும் குழந்தையை சமாதானம் செய்து தூங்க வைக்கின்றனர். அடுத்து இருவரும் பாரதியும் கண்ணம்மாவும் குழந்தைகளைப் பிரிந்து ஒன்றாக சேர்ந்து இருப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அகிலன் ஹேமாவோட நினைப்பு வந்தா பாரதி நைட்டுல கூட ஓடி வந்து விடுவான் என கூறுகிறார்.

அவர் சொன்ன மாதிரியே பாரதிக்கு ஹேமா அழுவது போல குரல் கேட்க அவர் பதறி தூக்கத்திலிருந்து எழுந்து கொள்கிறார். நேராக ஹேமாவை போய் பார்த்து வந்து விடலாம் என முடிவு செய்கிறார். கண்ணம்மா அசந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை எழுப்ப வேண்டாம் என முடிவு செய்து பாரதி வீட்டிற்கு கிளம்புகிறார். அதேபோல் கண்ணம்மாவுக்கு லஷ்மி அழுவது போல குரல் கேட்க அவரும் அலறுகிறார். அவரும் நேராகப் போய் லஷ்மியை பார்த்து வந்து விடலாம் என முடிவு செய்து ஆட்டோ டிரைவருக்கு போன் செய்து வர வைக்கிறார். பாரதி அசந்து தூங்கிக் கொண்டிருப்பார் அவரை எழுப்ப வேண்டாம் என கண்ணம்மா முடிவு செய்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.