வெண்பாவா கண்ணம்மாவா என முக்கிய முடிவு எடுக்கும் கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் பாரதி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்க அப்பொழுது தோன்றிய மனசாட்சி வெண்பாவுக்கு கொடுத்த வாக்கு சரியா? கண்ணம்மாவை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வெண்பாவை எப்படி திருமணம் செய்ய முடியும்? அப்படி பண்ணா தண்டனை என்னன்னு தெரியுமா? கண்ணம்மா பத்தி கொஞ்சம் நினைச்சு பார்த்தியா? அவ உனக்கு செஞ்ச உதவி ஞாபகம் இருக்கா என கேட்க பாரதி இந்த உயிர் அவ கொடுத்த ஒன்றுதான் அந்த நன்றி என்றைக்கும் எனக்கு இருக்கும். ஆனால் அவ செஞ்ச துரோகத்தை என்னால மறக்க முடியாது என கூறுகிறார். வெண்பாவா கண்ணம்மாவா யோசிச்சு நல்ல முடிவு எடு என மனசாட்சி சொல்லிவிட்டு மறைகிறது.

வெண்பாவா? கண்ணம்மாவா? பாரதி எடுக்கப் போகும் முடிவு? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு வெண்பா பாரதிக்கு போன் போட்டு ஹாஸ்பிடலுக்கு சாந்தி வந்து இருக்கா அவளோட நான் வீட்டுக்கு போயிடுறேன் என சொல்கிறார் மேலும் கல்யாணம் பண்ணிக்கிறதா வாக்கு கொடுத்து இருக்க மறந்துடாத. நான் உன்னை பிளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறதா நினைக்காத என வெண்பா கூறி ஃபோனை வைக்கிறார். ரோஹித் தன்னுடைய அம்மாவை சந்தித்து ஒரு பணக்கார பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போற விஷயத்தை கூறுகிறார்.

வெண்பாவா? கண்ணம்மாவா? பாரதி எடுக்கப் போகும் முடிவு? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து ஹாஸ்பிடலில் கண்ணம்மா, விக்ரம், ஒரு டாக்டர் மட்டும் இருக்கும் நேரத்தில் பிரசவ வலியில் ஒரு பெண் மருத்துவமனையில் அட்மிட் ஆக கண்ணம்மா உதவியுடன் அந்த பெண்ணுக்கு பிரசவம் நடக்கிறது. அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்க அவருடைய கணவர் குடி போதையில் வந்து குழந்தை என்னை மாதிரி இல்ல எனக்கு பிறந்தது இல்ல என சண்டையிட கண்ணம்மா அவரிடம் எவ்வளவோ பேச்சு வார்த்தை நடத்தியும் அவர் கேட்பதாக இல்லை. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.