கண்ணம்மாவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்துள்ளார் பாரதி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது திடீரென ஒப்பாரி வைக்கும் சத்தம் கேட்க தாமரை வெளியே எழுந்து வந்து பார்க்கிறார்.

கண்ணம்மாவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த பாரதி.. நடந்தது என்ன? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அங்கு பாரதி தன்னுடைய மாமியாருக்கு நினைவு அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. பிறகு கண்ணம்மா உட்பட எல்லோரும் வெளியே வந்து பார்க்க கணேசன் கண்ணம்மாவையும் அவரது அப்பாவையும் பாரதியின் மாமியார் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த அழைக்கிறார்.

கண்ணம்மா நகராமல் அப்படியே நிற்க அவருடைய அப்பா மாமா போயிட்டு வந்துடலாம் இல்லனா ஊரு ஜனங்க தப்பா நினைப்பாங்க எனக்குள்ள கண்ணம்மா என்று மலர் தூவி மரியாதை செலுத்த பிறகு கணேசன் ஆற்றங்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கப் போவதாகவும் கண்ணம்மாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என சொல்ல கண்ணம்மா நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என்னால வர முடியாது என சொல்கிறார்.

அதன் பிறகு கண்ணம்மாவின் அப்பா போய்ட்டு வந்துடலாம் என சொல்ல கண்ணம்மாவும் வருகிறார். பிறகு பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரும் சேர்ந்து திதி கொடுக்கும் சூழல் உருவாக மறுக்க முடியாமல் கண்ணம்மா உட்கார்ந்து திதி கொடுக்கிறார்.

கண்ணம்மாவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுத்த பாரதி.. நடந்தது என்ன? பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

அதன் பிறகு இருவரும் சேர்ந்து அன்னதானம் கொடுக்க இரவு நாடக நிகழ்ச்சி இருப்பதாக கணேசன் அறிவிக்க பிறகு இரவு நாடக நிகழ்ச்சி ஆரம்பமாக அனைவரும் கூடுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.