குழந்தைகளின் கையில் பாரதி கண்ணம்மாவின் போட்டோ சிக்கியுள்ளது.

Bharathi Kannamma Episode Update 04.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஸ்கூலுக்கு சென்று இருவருக்கும் சாப்பாடு ஊட்டி விட்டார் கண்ணம்மா. அப்போது லஷ்மி நீங்க ரெண்டு பேரும் எப்படி உன்னால் வந்தீங்க என கேட்க வரும் வழியில் அவருடைய கார் ரிப்பேர் ஆகி இருந்தது அதனால் அவர் என்னோடு வந்தார் என சமாளித்து விட்டார். பிறகு பாரதி ஹேமா ஓடி விளையாட லக்ஷ்மி அம்மா நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடுது இருக்க மறந்து விடாத என கூறுகிறார். என் அப்பாவோட என்னை சேர்த்து வைக்கிறதா சொல்லி இருக்க என சொல்ல கண்ணம்மாவின் முகம் மாறுகிறது. பிறகு எல்லாம் நல்லபடியா நடக்கும் என கண்ணம்மா கூறுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (4.12.2021 : சனிக் கிழமை)

குழந்தைகளின் கையில் சிக்கிய பாரதிகண்ணம்மா போட்டோ.. வெளியே வரப் போகும் உண்மை?? - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு ஸ்கூல் பெல் அடிக்க லஷ்மியும் ஹேமாவும் சென்று விட இவர்கள் இருவரும் வீட்டிற்கு கிளம்பி விடுகின்றனர். அதன் பின்னர் பாரதி கார் மெக்கானிக்கை அழைத்து காரில் என்ன பிரச்சினை என பார்க்க அவர் பிரச்சினை எதுவும் இல்லை என கூறுகிறார். ஆனால் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என பாரதி சொல்ல அவர் ஸ்டார்ட் செய்தபோது வண்டி ஸ்டார்ட் ஆனது. மழைக்காலம் என்பதால் நான்கைந்து முறை முயற்சி செய்ய வேண்டும் என மெக்கானிக் கூறிவிட்டு செல்கிறார். இந்த நேரத்தில் பாரதி உள்ளே செல்ல இருந்த போது வெண்பாவின் வீட்டு வேலைக்காரி சாந்தி வந்து வெண்பா அம்மாவுக்கு இப்படி துரோகம் பண்றீங்களே இது நியாயமா என கேட்கிறார்.

குழந்தைகளின் கையில் சிக்கிய பாரதிகண்ணம்மா போட்டோ.. வெளியே வரப் போகும் உண்மை?? - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

ஒன்பது வருஷமா அவங்க உங்களுக்காக கல்யாணமே பண்ணிக்காம காத்துக்கிட்டு இருக்காங்க. அவங்கள வெயில் எடுக்க எந்த உதவியும் பண்ணல பணம் கொடுக்கல வக்கீலை ஏற்பாட்டை செய்யல்ல இதெல்லாம் நியாயமா இப்படி துரோகம் பண்ணிட்டீங்களே என கூறுகிறார். அதெல்லாம் கூட சரி இந்த கண்ணம்மா கூட சேர்ந்து வாழ்றதுக்கு முடிவு எடுத்து இருக்கீங்களே அவை எப்படிப்பட்டவை உங்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணா, இதையெல்லாம் வெண்பா அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க எவ்வளவு வருத்தப்படுவாங்க என கூறுகிறார். கோபமான பாரதி வெண்பா மேல நான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனா அவ நம்பிக்கை துரோகம் பண்ணிட்டா. எனக்கே தெரியாமல் ஏன் பிரிஸ்கிரிப்ஷன் எடுத்து அஞ்சலிக்கு தவறான மாத்திரையை எடுத்து எழுதிக் கொடுத்திருக்கார். இன்னொரு முறை இங்கே வந்த நடக்குறதே வேற. அந்த வெண்பா வெளியே வந்தாலும் என் முகத்தை பார்க்க வேணாம்னு சொல்லு என கூறி விடுகிறார்.

குழந்தையாக மாறி மனைவியுடன் ஷாப்பிங் செய்த KPY Vinoth 💞 Iswarya

இந்தப் பக்கம் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு போன லட்சுமியும் ஹேமாவும் பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வண்டியில் வந்ததைப் பற்றி சொல்கின்றனர். சௌந்தர்யா தொடர்ந்து இதைப் பற்றி கேட்க லஷ்மி ஒரு கட்டத்தில் நீங்க எதுக்கு எங்க அம்மாவைப் பத்தியே கேட்டுட்டு இருக்கீங்க என கேட்டு விடுகிறார். உடனே சவுந்தர்யா ஏதோ கூறி சமாளித்து விடுகிறார்.

அதற்குப் பிறகு இருவரும் ரூமிற்குள் விளையாடிக் கொண்டு இருக்க போரடிக்குது என்னுடைய குழந்தை புகைப்படங்களைப் பார்க்கலாம் வா என ஸ்டோர் ரூமுக்கு அழைத்துச் செல்கிறார் அம்மா. அங்கே ஒவ்வொரு போட்டோவாக தேட கடைசியில் பரண் மேல இருக்கும் பழைய போட்டோ ஒன்றை ஹேமா எடுக்கிறார். அது பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம். சரியாக இருவரும் இந்தப் புகைப்படத்தைப் பார்க்க இருக்கும் நேரத்தில் சௌந்தர்யா வந்து அந்த புகைப்படத்தை வாங்கி இருவரையும் தூக்கி வெளியே அனுப்பிவிடுகிறார். உங்க கண்ணில் படக்கூடாது என்று தான் இந்த போட்டோவை எங்க வச்சிருக்கேன் இங்கேயும் வந்து எடுத்துட்டாங்க என சௌந்தர்யா புலம்புகிறார்.

கண்ணம்மா வீட்டில் பாரதி நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருக்க கண்ணம்மா ஆப்பமும் தேங்காய் பாலும் செய்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் வந்த ஆட்டோ டிரைவர் நம்ம வீட்டுக்கு ஒரு டைனிங் டேபிள் பார்த்து இருக்கேன். இதுவரைக்கும் நீயும் லஷ்மியின் கீழே உட்காந்து சாப்பிட்டிங்க இப்போ மச்சான் வந்து இருக்காரு இல்ல அவருக்கு டைனிங் டேபிள்ல உட்கார்ந்து சாப்பிட்டா தானே மரியாதையாக இருக்கும் எனக்கூற பாரதி கடுப்பாகிறார். மச்சான் கிச்சானு சொன்ன இங்கே ஒரு கொலையே நடக்கும் என கூறுகிறார்.

உடனே ஆட்டோ டிரைவர் கண்ணம்மா எனக்கு தங்கச்சி முறை அப்போ நீங்க மச்சான் முறை தானே என கூறுகிறார். பிறகு என்ன சமையல் வாசனை தூக்கலாக வருது என கேட்க ஆப்பமும் தேங்காய் பாலும் என கேட்க லஷ்மி ஓட அப்பாவுக்கு ரொம்ப புடிக்குமுன்னு சொல்லுவீங்களே அதுவா என கேட்கிறார். உங்களுக்கு இன்னைக்கு வாய் சரியில்லை மொதல்ல கெளம்புங்க என கண்ணம்மா அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

அதன்பிறகு வாங்க சாப்பிடுங்க என பாரதியை கூப்பிட என் பொண்ணுக்கு சாப்பாடு கொடுத்து மயக்கின மாதிரி என்னை மயக்க பாக்குறியா எனக்கு வேண்டாம் என கூறுகிறார். நான் ஆன்லைன்ல ஆடர் பண்ணிக்கிறேன் என கூறுகிறார். திரும்பவும் முதல்ல இருந்தா ஒழுங்கா சாப்பிடுங்க பசிக்குது தானே என கூறுகிறார் கண்ணம்மா. அப்போ இது சாப்பாடு சாப்பிட்ட நீங்க மயங்கிடாதீங்க என சொல்ல நான் ஒன்னும் அப்படி சொல்லல நீயா ஒன்னு முடிவு பண்ணிக்காத எனக் கூறுகிறார். நான் இது முடிவு பண்ணிக்கலாம் நான் வேணும்னா ஜட்ஜ் அம்மாவுக்கு போன் பண்ணி வெளியில் சாப்பிடறதுக்கு ரூல்ஸ் இருக்கா என கேட்கட்டுமா என கண்ணம்மா சொல்ல என்ன பிளாக்மெயில் பண்றியா என பாரதி கேட்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.