பாரதிக்கு ஹேமா ஷாக் கொடுக்க வெண்பாவை வெறுப்பேற்றியுள்ளார் கண்ணம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி வீட்டில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருக்க அப்போது ஹேமா எனக்கு அம்மாவை பத்தி தெரிஞ்சுக்கணும் போல இருக்கு அவங்க எப்படி இருப்பாங்க அவங்க போட்டோ காட்டுங்க என்ன சொல்ல பாரதி கடுப்பாகி எனக்கு நீ உனக்கு நான் அவ்வளவுதான் நமக்கிடையில் வேற யாரும் கிடையாது என சொல்கிறார். உனக்கு அம்மாவ பார்க்கணும்னு தோணுச்சுன்னா என்னை பாரு என கூறுகிறார்.

பாரதிக்கு ஹேமா கொடுத்த ஷாக்.. வெண்பாவை வெறுப்பேற்றிய கண்ணம்மா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் வெண்பா கார் ரிப்பேர் ஆகி நடுரோட்டில் எல்லாம் எனக்கு எதிராகவே நடக்குது என்று புலம்பி கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா வந்து வெண்பாவை வெறுப்பேத்துகிறார். நீ என் வாழ்க்கையை கெடுத்து நடுரோட்டில் விட்ட இன்னைக்கு ஆண்டவன் உனக்கு வச்சான் பாரு ஆப்பு என வெறுப்பேத்துகிறார். ‌

ஒழுங்கா ரோஹித்தை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழுற வழிய பாரு என அறிவுரை வழங்குகிறார். ஆனால் வெண்பா ஏட்டிக்கு போட்டியாக பேச நீ எல்லாம் சாகுற வரைக்கும் திருந்த மாட்ட எக்கேடு கெட்டு நாசமா போ, கடைசில காதல் பரத் மாதிரி தான் சுத்த போற என கூறி விட்டு கிளம்புகிறார்.

பாரதிக்கு ஹேமா கொடுத்த ஷாக்.. வெண்பாவை வெறுப்பேற்றிய கண்ணம்மா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு சௌந்தர்யா பாரதியிடம் ஜானு டீச்சரின் உடல்நிலை குறித்து கேட்க பாரதி அவருக்கு சிக்கலான கண்டிஷன் என்ன சொல்ல அவங்களை எப்படியாவது காப்பாத்திடு, என்னையும் அப்பாவையும் சேர்த்து வச்சு எங்களுக்கு நிறைய உதவிகளை பண்ணாங்க. எப்படியாவது அவங்களை காப்பாத்தி விடு என பாரதியை கெஞ்சி கேட்க பாரதி என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.