கண்ணம்மா பற்றி வெண்பா பேச அவரை பளாரென அமைத்துள்ளார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 04.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கடைக்குப் போய் பாரதிக்கு வேட்டி கட்ட எடுத்த பிறகு அதற்கு நானே பணம் கட்டி விடுகிறேன் என கண்ணம்மா கூறுகிறார். பிறகு சௌந்தர்யா தனித்தனியாக பில் போட சொல்ல பாரதியை கார்ட்டு கொடுக்குமாறு கூறுகிறார்.

கண்ணம்மா பற்றி பேசிய வெண்பா.. பளாரென அறைந்த பாரதி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

பிறகு பாரதி பில்லை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். 58000-ஆ ஒரு புடவை மட்டும் 26000-ஆ என அதிர்ச்சி அடைகிறார். பிறகு சௌந்தர்யா பாரதியை அமைதியாக்கி அவரை கிளம்ப சொல்கிறார். அதன்பிறகு இந்த பக்கம் வீட்டுக்கு வந்த சௌந்தர்யா பாரதி எப்படி நிகழ்ச்சிக்கு வர வைப்பது? அவர்கள் வரும்போது இரண்டு குழந்தைகளும் இங்கே தான் யாருடன் அனுப்புவது என ஆலோசனை செய்கின்றனர்.

இந்த பக்கம் வெண்பா பாரதி கண்ணம்மா உடை எடுக்க சென்று விட்டதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். பாரதியை திரும்பவும் எப்படி தன் பக்கம் இழுப்பது என வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

பாரதி உள்ளே யாரையும் விடாது என செக்யூரிட்டியிடம் கூறிவிட்டு சுமந்து கொண்டிருக்க அந்த நேரத்தில் வெண்பா உள்ளே வருகிறார். பாரதி கடுப்பாகி வெளியே போ நீ பச்சைத் துரோகி என வெண்பாவை இருக்கிறார். கொஞ்சமாவது நான் சொல்லுவதை கேளு என் பக்கம் நியாயம் இருக்கும் இல்ல வா என வெண்பா சொன்னா அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என பாரதி கூறுகிறார். நான் கண்ணம்மானு பேரை மாத்திட்டு வரவா உனக்கு தான் கண்ணம்மா பிடிக்குமே, இப்ப வேற கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழுற, புடவை எல்லாம் எடுத்து தர என கூறுகிறார். கடுப்பான பாரதி வெண்பாவை பளாரென்று அறைகிறார்.

கண்ணம்மா பற்றி பேசிய வெண்பா.. பளாரென அறைந்த பாரதி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!

வெண்பா இதை தான் எதிர்பார்த்தேன். அப்போ தான் அடுத்த முறை எங்கிட்ட இறங்கி வந்து பேசுவ என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.