சௌந்தர்யா போட்ட திட்டம், வெண்பாவிற்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக் காத்துக் கொண்டிருந்தது.

Bharathi Kannamma Episode Update 03.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி ஹேமாவை பார்க்க பள்ளிக்கு கிளம்புகிறார். அவர் காரை ஸ்டார்ட் செய்ய வந்து கார் ஸ்டார்ட் ஆகாமல் இருக்கிறது. இதனால் பாரதி கடுப்பாகிறார். பிறகு ஆட்டோ டிரைவரை கூப்பிட்டு யோவ் உன்னை காரை தானே துடைக்க சொன்னேன் இப்போ கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது என்ன பண்ண என கேட்கிறார். ஐயோ சார் நான் காரை மட்டும்தான் தொடச்சேன் வேற எதுவும் பண்ணல என அவர் கூறுகிறார். பிறகு அவருடைய ஆட்டோவில் ஏறிக்கொண்டு வண்டியை எடு என கூறுகிறார். ஆனால் டிரைவர் நான் ஸ்கூலுக்கு போகணும் வர முடியாது என சொல்கிறார். பாரதி ஆட்டோவில் இருந்து இறங்காமல் அவங்க வேற ஆட்டோல போகட்டும் என சொல்கிறார்.

சக்தி எனப்படுவது யாதெனின்..

அவங்க வேற பார்க்கிறாங்க என ஆட்டோ டிரைவர் செல்ல அந்த நேரத்தில் கண்ணம்மா வருகிறார். உடனே பாரதி ஆட்டோவிலிருந்து இறங்கி நான் வேற ஆட்டோல போய்க்கிறேன் எனக் கூறுகிறார். கண்ணம்மா இந்த தெருவில் உள்ள ஆட்டோ எதுவும் வராது மெயின் ரோட்டுக்கு தான் போகணும் என சொல்கிறார். நானும் ஸ்கூலுக்கு தான் போகிறேன் இதிலேயே ஏறுங்க எனக் கூறுகிறார். பாரதி வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல ரொம்ப பண்ணாதீங்க என கண்ணம்மா சொல்கிறார்.

பிறகு கண்ணம்மா இந்த பைய உள்ள வையுங்கள் என கூறுகிறார். இதுக்குத்தான் நான் வேற ஆட்டோல போறேன்னு சொன்னேன் என பாரதி சொல்ல பைய தான் உள்ள வைக்க சொன்னேன் என சொல்லிவிட்டு பையை வைத்த பிறகு தள்ளுங்க என பாரதியை தள்ளிவிட்டு உள்ளே ஏறி அமர்ந்து கொள்கிறார். பிறகு பாரதியும் ஆட்டோவில் ஏறி அமர ஆட்டோ கிளம்புகிறது.

சௌந்தர்யா ஏற்கனவே ஆட்டோ டிரைவருக்கு போன் செய்து இப்படி ஒரு திட்டத்தை போட சொல்லி உள்ளார். ஆட்டோ டிரைவரும் அதை கச்சிதமாக செய்து விட்டார். அதுமட்டுமல்லாமல் வழக்கமாகப் போகும் சாலையில் போகாமல் கரடுமுரடான ரோட்டில் ஆட்டோவில் கூட்டிச் செல்கிறார். கண்ணம்மாவும் வேண்டுமென்றே பாரதியை இடித்துக் கொண்டும் அவர் மீது கையை வைத்துக் கொண்டு வருகிறார். பாரதி ஆட்டோ டிரைவரை திட்டிக்கொண்டே கண்ணம்மாவை முறைத்துக்கொண்டு கையை எடு என திட்டியபடி செல்கிறார்.

அஜித்தே சொன்னாலும் நாங்க Thala-ன்னு தான் கூப்பிடுவோம் – Actor Sendrayan Exclusive Speech

இந்த பக்கம் வெண்பாவின் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக சாந்தி ஜோசியர் ஒருவரை வீட்டிற்கு கூட்டி வந்து பாரதி மற்றும் வெண்பாவின் ஜாதகத்தை கொடுக்கிறார். இருவரின் ஜாதகத்தை பார்த்த ஜோசியர் உள்ளதை உள்ளபடி சொல்கிறார். வெண்பாவின் ஜாதகம் சூர்ப்பநகை ஜாதகம். ஒரு விஷயத்துக்காக இலவு காத்த கிளி போல பல ஆண்டுகள் காத்திருக்கிறார். ஆனால் அவர் காத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும் என கூறுகிறார். அவர்களின் ஜாதகத்தில் திருமணத்திற்கான வாய்ப்பே இல்லை என சொல்கிறார்.

பாரதியின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவர் வெள்ளந்தியான மனிதர். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவர். ஆனால் தனக்கு துரோகம் செய்து விட்டார்கள் எனத் தெரிந்தால் எரிமலையாக எரிந்து விழுவார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். தற்போது அதெல்லாம் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது என கூறுகிறார். இதனால் கடுப்பான சாந்தி ஜோசியரை வெளியே அனுப்பி வைக்கிறார்.

இந்த பக்கம் பள்ளியில் லட்சுமியும் ஹேமாவும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். எங்கப்பா இல்லாதது போர் அடிக்குது. ஆனா நீ எங்க வீட்டுல இருக்குறது எனக்கு சந்தோஷமா இருக்கு என ஹேமா லட்சுமியிடம் கூறுகிறாள். இந்த நேரத்தில் ஆட்டோவில் பாரதி வந்து இறங்குவதை லஷ்மி பார்த்து ஹேமாவிடம் கூறுகிறார். பின்னாடியே கண்ணம்மாவும் வந்து இறங்குவதை பார்த்து இருவரும் ஷாக் ஆகினர். ரெண்டு பேரையும் பார்க்க புதுசா இருப்பதாக கூறுகிறார் ஹேமா. உங்க அம்மா எனக்கும் அம்மாவா இருந்திருக்கலாம் என சொல்ல பதிலுக்கு உங்க அப்பா எனக்கும் அப்பாவாக இருந்திருக்கலாம் என லஷ்மி கூறுகிறார். இருவரும் ஒன்றாக நடந்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய parent’s மாதிரியே இருப்பதாக சொல்கிறார்.

பிறகு ஹேமா பாரதியை கட்டி அணைத்துக்கொண்டு உங்கள ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று சொல்கிறார். பாரதியின் நேத்து நைட் எல்லாம் உன் ஞாபகம் தூக்கமே இல்லை என சொல்கிறார். பிறகு லஷ்மியும் நம்ம வீட்லதான் இருக்கா. நம்ம வீட்டுக்கு அனுப்பி வைத்த சமையல் அம்மாவுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க என கூறி தேங்க்ஸ் சொல்ல வைக்கிறார். பிறகு கண்ணம்மா இருவருக்கும் சாப்பாடு ஊட்டி விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.