திரும்பவும் பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் வெண்பா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா அம்மா என்ன பாரதி வரைந்து கொடுத்த போட்டோவை கையில் வைத்துக்கொண்டு இனி யாரிடமும் சண்டை போட மாட்டேன் ஒழுங்கா சமத்தா இருப்பேன் என சத்தியம் செய்ய அந்த நேரத்தில் அங்கே சௌந்தர்யாவும் அகிலும் வர அம்மா எவ்வளவு அழகா இருக்காங்க, அவங்க மட்டும் உயிரோட ஏதும் தெரிந்தால் நாம எல்லாரும் ஒண்ணா சந்தோஷமா இருந்திருக்கலாம் என சொல்லுகிறார்.

திரும்பவும் பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்த வெண்பா.. ஷர்மிளாவுக்கு வந்த சந்தேகம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு ஹேமா கீழே போனதும் சௌந்தர்யா பாரதி சொன்னது பொய்யின்னு தெரிஞ்சா ஹேமா அவளை வெறுத்துடுவா, அது மட்டும் நடந்திட கூடாது என வருத்தப்படுகிறார். இந்த பக்கம் லட்சுமி கண்ணம்மாவிடம் பாரதி தனக்காக ஸ்கூலில் பேசிய விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார். சீக்கிரம் நாம எல்லோரும் ஒண்ணா ஒரே வீட்டில் இருப்போம் என கூறுகிறார்.

அதன் பிறகு சாந்தி வெண்பா ரூமில் ஆளில்லாமல் இருக்க போன் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து பதறி போய் எடுத்து பாரதிக்கு போன் போட்டு என்ன ஆச்சு என விசாரிக்க பாரதி நடந்த விஷயங்களை சொல்லி இதை வீட்டில் யாருக்கும் தெரியப்படுத்தக் கூடாது என கூறுகிறார். பிறகு ஷர்மிளா இந்த இடத்திற்கு வந்து வெண்பா எங்கே என கேட்க சாந்தி பிரண்டு வீட்டுக்கு போய் இருப்பதாக சொல்லி சமாளிக்க ஷர்மிளாவுக்கு சந்தேகம் வருகிறது.

திரும்பவும் பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்த வெண்பா.. ஷர்மிளாவுக்கு வந்த சந்தேகம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் வெண்பா உடல் நிலை சரியாக பாரதி சந்தோஷப்பட பிறகு வெண்பா மீண்டும் என்னை கல்யாணம் பண்ணிக்குவியா மாட்டியா என கேட்க பாரதி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.