கண்ணம்மாவுக்கு பாரதி தாலி கட்ட போன நேரத்தில் கல்யாணத்தை நிறுத்தி உள்ளார் ஆர் ஜே பாலாஜி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு விஜய் டிவி சீரியலில் இருந்து பிரபலங்கள் பாரதி கண்ணம்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமர்க்களம் படுத்துகின்றனர்.

மறுநாள் காலையில் வயல்வெளிக்கு நடுவே பந்தல் போட்டு கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்திருக்க பாரதி ஹேமா மற்றும் லட்சுமி உடன் டிராக்டரில் வந்து இறங்குகிறார். அதன் பிறகு மாப்பிள்ளை வந்தாச்சு பொண்ணு எங்க என எல்லோரும் கேட்க அப்போது கண்ணம்மா பல்லக்கில் வந்து அழகாக இறங்கி மணமேடைக்கு வருகிறார்.

பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு ஐயர் எங்கே அக்னி குண்டம் எங்கே என கேட்க கணபதி இது தமிழ் முறைப்படி நடக்கப்போற கல்யாணம் ஆகமொன்றம் எல்லாம் இருக்காது என சொல்ல தாலியாவது கட்டுவீங்களா இல்லையா என கேட்க அதெல்லாம் கண்டிப்பாக கட்டுவாங்க, இந்த கல்யாணத்தை நடத்தி வைக்க கவிஞர் சினேகன் மற்றும் அவருடைய மனைவி கன்னிகா வருவதாக சொல்ல அவர்கள் இருவரும் என்ட்ரி கொடுக்க பிறகு கவிஞர் சினேகன் தாலி எடுத்துக் கொடுக்க பாரதி கண்ணம்மா கழுத்தில் கட்டப் போகும்போது நிறுத்துங்க என ஒரு குரல் வருகிறது.

இதனால் எல்லோரும் அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க ஆர் ஜே பாலாஜி என்ட்ரி கொடுக்கிறார். உங்க ரிசல்ட் வந்துடுச்சு என சொல்லிக் கொண்டே வரும் பாலாஜி என்ன ரிசல்ட் என்ன கேட்க டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் என சொல்ல அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

அதன் பிறகு டிஎன்ஏ ரிசல்ட் வந்து இரண்டு பேரும் சேர்ந்து ஒரு வாரம் ஆச்சு என சொல்ல அப்போ கரெக்டா சுபம் போடுறதுனால தான் நான் வந்திருக்கேனா என சொல்லி பொய் சாரில் உட்கார பிறகு சிவின் என்ட்ரி கொடுக்கிறார். அடுத்து கவிஞர் சினேகன் பாரதியிடம் இருந்து தாலியை வாங்கி முதல் முறையாக குழந்தைகள் தாலி எடுத்துக் கொடுத்து அப்பா அம்மாவுக்கு திருமணம் நடக்கும் விஷயம் இங்கதான் நடக்கப்போகிறது என சொல்லி ஹேமா லட்சுமியை தாலியை கொடுக்க சொல்ல பாரதி அதை வாங்கி கண்ணம்மா கழுத்தில் கட்டுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.