பாரதியை விவாகரத்து செய்யச் சொல்லி அஞ்சலியின் அம்மா வீட்டுக்கு வந்த நிலையில் அவருக்கு பதில் கொடுத்துள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Episode Update 02.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வீட்டில் போட்டோவை மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார் கண்ணம்மா. இந்த நேரத்தில் துளசி வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்து கண்ணம்மாவிடம் பேசுகிறார். உன்னோட குழந்தைகளுடைய எதிர்காலத்துக்காக பாரதி சாரோட சேர்ந்து வாழ்வது தான் சரி என்று கூறுகிறார் துளசி. எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவு எது என சொல்கிறார். பிறகு ஆட்டோ ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் போது பாரதியுடன் கண்ணம்மா இருக்கும் புகைப்படத்தை காண்பிக்கிறார். இதனை பார்த்த கண்ணம்ம மகிழ்ச்சி அடைகிறார்.

அந்த அணியால் மட்டுமே, இங்கிலாந்து அணி வேகத்தை தடுக்க முடியும் : முன்னாள் கேப்டன் சொல்கிறார்

பாரதியை விவாகரத்து செய்ய சொல்லி வீட்டுக்கு வந்த அஞ்சலியின் அம்மா.. கண்ணம்மா எடுத்த முடிவு - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!
No

அதன்பிறகு துளசி அங்கிருந்து கிளம்பி கொஞ்ச நேரத்தில் அஞ்சலியின் அம்மா வருகிறார். அவருக்கு கடன் கொடுத்த கடனை ஒரு வாரத்தில் திருப்பித்தர வேண்டும் இல்லை என்றால் வீட்டை பூட்டி பொருட்களை தூக்கி தெருவில் வீசி விடுவேன் என கூறியதால் கண்ணனைப் பார்த்து விவாகரத்து வாங்கிக் கொடுத்துவிட்டால் நடக்கு ஒரு கோடி கிடைக்கும் என கணக்குப் போட்டு வருகிறார்.

தன் அம்மா வீட்டுக்கு வந்ததும் கண்ணம்மாவிடம் நீ பாரதியை விவாகரத்து பண்ணிடு. உனக்கு ஒரு நாள் இல்ல 5 கோடி கிடைக்கும். ஏழு தலைமுறைக்கும் ஒக்காந்து சாப்பிடலாம் என கூறுகிறார். இதனால் கோபமான கண்ணம்மா யார் சொல்லி இங்க வந்தீங்க. எட்டு வருஷமா தனியாளாக கஷ்டப்பட்டு இருக்கேன் அப்ப இல்லாத அக்கறை இப்ப என்ன உங்களுக்கு நான் சாகுற வரைக்கும் என் புருஷன் டாக்டர் பாரதிதான். என் உயிர் மூச்சு இருக்கிற வரைக்கும் அவர் கட்டுன தாலி என்னோட கழுத்துல இருக்கும் என கூறுகிறார். இன்னொரு முறை விவாகரத்து பண்ணிடு என சொல்லிக்கிட்டே இங்கே வந்துடாதீங்க என கூறி அனுப்பி வைக்கிறார்.

Mask போடலான 60,000 ரூபாய் Fine🤣 – Actress Mirnalini Ravi Fun Fill Interview

இந்தப்பக்கம் வெண்பா பாரதியும் கண்ணம்மாவும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்தால் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார். கண்ணம்மாவோட ரெக்கை உடைக்கணும் என கோபப்படுகிறார்.

இன்னொரு பக்கம் ஸ்கூலில் லட்சுமியும் ஹேமாவும் மதிய உணவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஹேமாவுக்காக பாரதி சாப்பாடு கொண்டு வருகிறார். பாரதி வந்ததும் அவர் ஹேமாவிடம் நடந்து கொள்வதைப் பார்த்து எனக்கும் அப்பா இல்லையே என வருத்தப்படுகிறார் லட்சுமி. பின்னர் இருவரும் சாப்பிட சென்று விடுகின்றனர். லஷ்மி கண்ணம்மாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.