கண்ணம்மாவுக்கு பாரதி சர்ப்ரைஸ் கொடுக்க கடைசியில் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அகிலன் மற்றும் கணபதி பாரதியை தேடிச் செல்ல அப்போது பாரதி வர பிறகு நிச்சயதார்த்தம் நடக்க தொடங்குகிறது.

பாரதி முகூர்த்த புடவையை பார்த்து எப்படி இருக்கு என கண்ணம்மாவிடம் கேட்க சூப்பராக இருப்பதாக சொல்கிறார். பிறகு வேறொருவர் புடவை பாரதியே இரவோடு இரவாக அவர் கையால் நெய்த புடவை என சொல்ல கண்ணம்மா கண்ணீர் வடித்து சந்தோஷப்படுகிறார்.

அடுத்து கண்ணம்மாவுக்கு தாலி செயின் பங்க்ஷன் தொடங்க தங்கம் காணாமல் போக அனைவரும் பதற்றம் அடைகின்றனர். பாரதி கண்ணம்மாவின் அப்பாவை உள்ளே அழைத்துச் சென்று கண்ணம்மாவின் அம்மாவின் தாலியை வாங்கி வந்து கொடுத்து இதில் தாலி செய்யலாமா என கேட்க தாராளமா செய்யலாம், அம்மாவோட தாலி பொண்ணுக்கு கிடைக்கிறது பெரிய பாக்கியம் என சொல்ல கண்ணம்மா மீண்டும் சந்தோஷமடைகிறார்.

அடுத்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட நம்ம வீட்டு பொண்ணு சீரியல் நடிகை, ரோகித், தமிழன் சரஸ்வதியும் சீரியல் குழுவினர் நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.