கண்ணம்மா வீட்டில் பாரதி தவியாய் தவித்து வருகிறார்.

Bharathi Kannamma Episode Update 01.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமாவும் லட்சுமியும் பாரதி வீட்டில் விளையாடிக் கொண்டிருக்க அப்போது வந்த சௌந்தர்யா நேரமாச்சு படுத்து தூங்குங்க என கூறுகிறார். லஷ்மி ஒரு போரா இருக்கு இங்க பார்க் எதுவும் இல்லையா என கேட்க பக்கத்தில் இருக்க பெரிய பார்க்கிற்கு நாளைக்கு உங்களை கூட்டிட்டு போகிறேன் என சௌந்தர்யா கூறிவிட்டு அவர்களுக்கு கதை சொல்கிறார்.

சஸ்பெண்ட் விவகாரம் : நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..

கண்ணம்மா வீட்டில் தவியாய் தவிக்கும் பாரதி.. நடுராத்திரியில் காத்திருந்த அதிர்ச்சி - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

சௌந்தர்யா சொன்ன கதையை கேட்ட ஹேமா இது இங்கிலீஷ் படத்துல வர கதை என கண்டுபிடித்து விடுகிறார். நாளைக்கு புது கதை சொல்லுங்க என கூறிவிட்டு தூங்குகிறார். இந்தப் பக்கம் வெண்பா வீட்டு வேலைக்காரப் பெண் சாந்தி மாயாண்டியை காணும் என புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் சரியாக வீட்டுக்கு போன மாயாண்டி பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்ப்பு வந்துடுச்சே அதைப் பத்தி ஏதாவது தெரியுமா என மாயாண்டி கேட்க அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல பாரதி கண்ணம்மாவை அந்த வீட்டுக்குள்ள சேர்க்கவே மாட்டார். அந்த அளவுக்கு வெண்பா அம்மா அவரோட மனச கெடுத்து வச்சிருக்காங்க என கூறுகிறார். நீ சொல்றதெல்லாம் சரிதான் பாரதி கண்ணம்மா அந்த வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டேன்னு சொல்லிட்டாரு என சொல்ல சாந்தி சந்தோஷப்படுகிறார்.

ஏய் முதல்ல முழுசா கேளு. அதனால பாரதி மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு கண்ணம்மா வீட்டுக்கு சேர்ந்து வாழ கிளம்பிட்டாரு. இப்போ அவங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில்தான் இருக்காங்க என மாயாண்டி கூற சாந்தி ஐயோ ஐயோ இந்த அநியாயம் எங்கு நடக்கும்? பெண் தானா ஊர்ல இல்லாததுனால என்ன எல்லாம் நடக்குது என கூறுகிறார். என்னால் இதை தாங்க முடியல வெண்பா அம்மா எப்படித்தான் தாங்கிக்க போறாங்களோ என கூறுகிறார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா?

சௌந்தர்யா வீட்டில் அஞ்சலி குழந்தையை ஆட்டிக்கொண்டு மந்திரம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் வந்த அகில் பாப்பா தூங்கியாச்சா எனக்கேட்டு ஏன் இந்த நேரத்தில் மந்திரம் படித்துக் கொண்டிருக்கிற என கேட்கிறார். நான் நீ நம்பு பாப்பா இன்னிக்கு உயிரோடு இருக்க காரணம் கண்ணம்மா தான். கண்ணம்மாவும் பாரதி மாமாவும் ஒரே வீட்டுல வாழறாங்க. அவங்களுக்குள்ள எந்த சண்டையும் சச்சரவும் வந்துடக் கூடாதுன்னு வேண்டிக்கிறேன் என கூறுகிறார். அதுவும் சரிதான் என அகில் கூறுகிறார். பிறகு அஞ்சலி நீங்க இப்போ எந்த வேலைக்கும் போகவில்லை என கேட்க உன்னையும் பாப்பாவையும் விட்டு விட்டு எப்படி போறது என அகில் கூறுகிறார். அதுதான் வீட்ல இவ்வளவு பேர் இருக்காங்க இல்ல நான் பார்த்துக்கிறேன் நீ போயிட்டு வா என அஞ்சலி கூறுகிறார். அப்பத்தான் உனக்கும் ரிலாக்ஸாக இருக்கும் என சொல்கிறார். அப்படியா அடுத்த வாரம் ஹைதராபாத்தில் ஒரு ஈவண்ட் இருக்கு அப்போ அதற்கு போயிட்டு வரேன் என கூறுகிறார் அகில்.

கண்ணம்மா வீட்டில் தவியாய் தவிக்கும் பாரதி.. நடுராத்திரியில் காத்திருந்த அதிர்ச்சி - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் கண்ணம்மா துணி மடித்துக்கொண்டு பாரதியை நேரம் ஆச்சு போய் படுத்து தூங்குங்க என கூறுகிறார். உள்ளதான் ஏசி இருக்கு போய் நீங்க படுத்துக்கங்க நான் வெளிய படுத்துகிறேன் என்று சொல்கிறார். ஓசி ஏசில ஒன்னு நான் தூங்க மாட்டேன் நான் இங்கேயே படுத்துகிறேன் என பாரதி கூறுகிறார். இங்க கொசு நிறைய கடிக்கும். உங்களுக்கு தூக்கம் வராது அது ஒன்னும் ஓசி ஏசி இல்ல உங்க அம்மா வாங்கி கொடுத்தது தான் என கூற அது ஒன்னும் தேவையில்லை என பாரதி சொல்கிறார். இங்க ஓடுற வணக்கம் நான் தான் கரண்ட் பில் கட்டுறேன். ஏண்டா இப்படி சின்னப்புள்ளத்தனமா பண்றீங்களா என சொல்லிவிட்டு பாய் தலகாணியை எடுத்துக் கொண்டு வந்து தந்து விட்டு கண்ணம்மா படுக்கச் சென்று விடுகிறார்.

சோபாவில் அமர்ந்து கொண்டிருக்கும் பாரதியைக் கொசு போட்டு கடிக்க அவர் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பொட்டுத் தூக்கம் இல்லாமல் ஹோட்டலில் ஆடர் செய்த சாப்பாடு நன்றாக இல்லாததால் பசியில் தவிக்கிறார். எனக்கு கொஞ்சம் கூட தூக்கம் இல்ல இவ மட்டும் நல்லா சொகுசா தூங்குற என்னமா தூங்குவதைப் பார்த்து பொறாமை படுகிறார். கடவுள் இவளுக்கு மட்டும் எப்படித்தான் இப்படியெல்லாம் வரம் கொடுக்கிறாரோ என புலம்புகிறார். பிறகு கிச்சனில் ஏதாவது இருக்கா என பார்க்க பார்க்க எதுவும் இல்லாததால் அங்கிருக்கும் உடைத்த கடலை எடுத்து சாப்பிடுகிறார். ஒரு வழியாக அதன் பிறகு படுத்து தூங்கலாமென படுக்கிறார்.

திடீரென இடி இடிக்க தூக்கத்திலிருந்து எழுந்த பாரதி காலை கீழே வைக்க வீடு முழுவதும் ஒரே தண்ணீர். கதவைத் திறந்து பார்த்தால் மழை கொட்டு கொட்டு என கொட்டுகின்றது. இதனால் அவர் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.