விஷம் குடித்து உயிரை விட போவதாக மிரட்டியுள்ளார் வெண்பா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் போட உடல் நல குறைபாட்டால் கண்ணம்மா டல்லாக பேச என்ன ஏது என விசாரிக்கிறார். பிறகு சௌந்தர்யா ஸ்கூலில் நடந்த விஷயத்தை சொல்ல கண்ணம்மா சந்தோஷப்படுகிறார் உங்கள் மகன் வாழ்க்கையில் முதல் முறையாக பொறுப்பான அப்பாவாக நடந்து கொண்டிருக்கிறார் என சொல்கிறார்.

விஷம் குடித்து உயிரை விடப் போவதாக மிரட்டிய வெண்பா.. பாரதி எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட் !!

அடுத்ததாக வெண்பா மீண்டும் மீண்டும் போன் போட்டு கொண்டிருக்க பாரதி போனை எடுக்காமல் இருக்கிறார். பிறகு போனை எடுத்துப் பேச மீண்டும் வெண்பா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்க அதற்கு வாய்ப்பே இல்லை என சொல்லி போனை வைக்கிறார்.

அதன் பிறகு வெண்பா விஷ பாட்டில் போட்டோவை பாரதிக்கு அனுப்ப இதை பார்த்து அதிர்ச்சியடையும் அவர் வெண்பா விஷயம் குடிக்க போவதாக அனுப்பிய ஆடியோ மெசேஜ் பார்த்து இன்னும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு வெண்பா விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழ அவளது போன் கீழே விழுந்து ஸ்விட்ச் ஆப் ஆக பாரதி பதறி போய் வீட்டுக்கு வர வெண்பாவை அழைத்துக் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதிக்கிறார். அவள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக டாக்டர் சொல்ல நானே அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறேன் என பாரதி உள்ளே செல்கிறார்.

விஷம் குடித்து உயிரை விடப் போவதாக மிரட்டிய வெண்பா.. பாரதி எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட் !!

இந்த பக்கம் ஹேமா அம்மா என பாரதி கொடுத்த போட்டோவை பார்த்து இன்னைக்கு ஸ்கூல்ல அப்பா எனக்காக பேசினாரு. நான் அவருக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணி கொடுத்தேன் அதே ப்ராமிஸை உனக்கும் பண்ணி கொடுக்கிறேன். இனிமே நான் யாரிடமும் சண்டை போட மாட்டேன் நல்ல பொண்ணா இருப்பேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Author – Vivek Amirthalingam