நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடுகள் நடக்க நடு இரவில் காணாமல் போய் உள்ளார் பாரதி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாரதி உட்பட எல்லோரும் கண்ணம்மாவின் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். பிறகு கண்ணம்மா ஹேமா, லட்சுமி, பூஜா என மூவரையும் நாளைக்கு காலையில வீட்ல பங்க்ஷன் இருக்கு, இன்னமும் என்ன விளையாட்டு வந்து தூங்குங்க என உள்ளே அழைக்க பாரதியும் எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்குகிறேன் என எழுந்து சமுதாய கூடத்திற்கு வந்து விடுகிறார்.

நிச்சயதார்த்தத்துக்கு நடந்த ஏற்பாடு.. நடு இரவில் காணாமல் போன பாரதி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

நாளைக்கு நிச்சயதார்த்தம் இவன் இன்னமும் முகூர்த்த புடவை எடுக்காமல் இருக்கான் என சௌந்தர்யா புலம்ப அவர் ஏற்கனவே எடுத்து வச்சிட்டு இருப்பார் அதான் இப்படி கூலாக இருக்கிறார் என கண்ணம்மா சொல்கிறார். பிறகு அவங்களும் தூங்கவர தாமரை நம்ப வீட்லையே தூங்குங்க என உள்ளே கூட்டிச் சென்று விட அகிலன் மற்றும் கணபதி மட்டும் பாரதி உடன் சமுதாயக்கூடத்தில் தூங்க வருகின்றனர்.

இருவரும் முகூர்த்த புடவை பற்றி கேட்க பாரதி டிஸ்டர்ப் பண்ணாமல் தூங்குங்க என சொல்லிவிட இருவரும் தூங்கிய பிறகு பாரதி எழுந்து வெளியே எங்கேயோ கிளம்ப அதை கணபதி பார்த்துவிட்டு பிறகு அகிலனை எழுப்பி பாலோ செய்து வர ஒரு கட்டத்தில் பாரதி போன இடம் தெரியாமல் குழம்பி விடுகின்றனர். அகிலன் மற்றும் கணபதி என இருவரும் ஆளுக்கு ஒரு திசையாக தேட பாரதி கிடைக்கவில்லை.

நிச்சயதார்த்தத்துக்கு நடந்த ஏற்பாடு.. நடு இரவில் காணாமல் போன பாரதி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மறுநாள் காலையில் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்க சௌந்தர்யா உட்பட எல்லோரும் பாரதி ரெடி ஆகிட்டானா என கேட்டுக்கொண்டே இருக்க கணபதி ரெடி ஆகிட்டே இருக்காரு என சமாளிக்கிறார். பிறகு அகிலன் பாரதியை தேடிச்சென்று அவர் இல்லாமல் வர கணபதி அகிலனுடன் சேர்ந்து வீட்டை சமாளித்துவிட்டு திரும்பவும் பாரதியை தேடி செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.