Bharathi Kannamma Climax Update

பாரதியால் வெண்பா கர்ப்பமாக இருப்பதாக பாரதிகண்ணம்மா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannamma Climax Update : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதிகண்ணம்மா சீரியல் வில்லியாக நடித்து வருபவர் பரீனா.

இவர் தற்போது நிஜ வாழ்க்கையில் கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சில நேரங்களில் இவர் கர்ப்பமாகி இருப்பது போல காட்சிகள் அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தங்கமகன்’ நீரஜ் சோப்ராவுக்கு என்ன ஆயிற்று? : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..

அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் தெலுங்கு பின் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் ரீமேக்தான். இதில் வில்லி வெண்பா பாரதியின் டிஎன்ஏ சேம்பலை எடுத்து தான் கர்ப்பம் ஆகி விடுகிறார். தன்னையும் கண்ணம்மாவையும் பிரிக்க வெண்பா செய்த வேலைகள் எல்லாம் பாரதிக்கு தெரியவருகிறது.

Andrea-வுக்கு குத்துச்சண்டை பயிற்சி தரும் “சார்பாட்டா பரம்பரை” வீரர் Raman.! | Santhosh Prathap | HD

இதனையடுத்து பாரதி வெண்பாவிடம் சண்டையிட செல்கிறார். அப்போது வெண்பா தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு நீதான் காரணம் என்பது போன்ற காட்சிகள் தெலுங்குவில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் இடம்பெற்றுள்ளது.

இதனால் இதுபோன்ற காட்சிகள் விரைவில் தமிழிலும் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.