சந்தியாவை பழிவாங்க சிவகாமி மீது திருட்டு பட்டம் கட்டியுள்ளார் சாமியார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா. இந்த இரண்டு சீரியல்களும் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாகி வருகின்றன.

இன்றைய எபிசோடு சாமியார் கோவிலுக்கு போட வைத்திருந்த பூமி பூஜை தடுத்து நிறுத்தலாம் ஆனால் இந்த சிறப்பு பூஜையை தடுத்து நிறுத்த முடியாது என சொல்ல சிவகாமி மேடைக்குச் சென்று சாமியார் காலில் விழுந்து எங்கள மன்னிச்சிடுங்க என மன்னிப்பு கேட்கிறார். உங்க வீட்டு மூத்த மருமகளை கூப்பிட்டு சாமிக்கு புடவையை அணைக்க சொல்லுங்க என சொல்ல சிவகாமி சந்தியாவை மேடைக்கு அழைக்கிறார். ஊர் மக்கள் எல்லோரும் சத்தம் போட சந்தியாவும் வேறு வழி இல்லாமல் நடைபெற்றுச் சென்று புடவை மாற்ற உள்ளே செல்கிறார்.

ஆனால் சந்தியாவுக்கு புடவை மாற்ற தெரியாத காரணத்தினால் அவர் தடுமாற இதை உள்ளே இருந்து ஒரு பெண் வந்து சொல்ல பிறகு உங்களது குடும்பத்தில் இருந்து வேறு யாராவது வர சொல்லுங்கள் என சாமியார் சொல்ல அர்ச்சனா நான் வருகிறேன் என கை தூக்க கர்ப்பமாக இருக்கும் பெண் செய்யக்கூடாது என சாமியார் குறிப்பிடுகிறார். அதன் பிறகு பாரதி கண்ணம்மாவை கண் காட்ட கண்ணம்மா நான் வருகிறேன் என சொல்லி நாளைக்கு செல்கிறார். நீ யார் உனக்கு இந்த குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என கேட்க நான் இந்த குடும்பத்துக்கு சொந்தம் தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறேன் என கூறுகிறார்.

பிறகு கண்ணம்மா சந்தியா மற்றும் சிவகாமி மூவரும் சேர்ந்து சாமிக்கு புடவை அணிவித்து சாமியார் கொடுத்த நகைகளை போட்டு விடுகின்றனர். பிறகு ஊர் மக்கள் அம்மனுக்கு மாலை சாத்துகின்றனர். அதன் பிறகு சாமியார் ஒவ்வொரு மாலையாக எடுத்து மக்கள் மீது தூக்கி வீசுகிறார். சாமியின் கழுத்தில் இருந்த நகையை காணவில்லை எனக் கூற அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். இந்த நகையை இவர்கள் தான் எடுத்திருக்க வேண்டும் என சிவகாமி குடும்பத்தின் மீது பழி போட அவர்கள் நாங்கள் எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

நகையை திருடியது யார் என அந்த அகிலாண்டேஸ்வரியை கண்டுபிடிப்பார் என சொல்லி சாமியார் சாமிக்கு அலங்காரம் பண்ணவங்க மாலை போட்டவங்க எல்லோரையும் அழைத்து தீபாராதனை காட்ட சொல்கிறார். ஒவ்வொருத்தராக தீபாரதனை காட்டிய பிறகு இவர்கள் யாரும் நகையை எடுக்கவில்லை இந்த மூவரில் ஒருவர் தான் நகையை எடுத்து இருக்க வேண்டும் என சாமியார் சொல்கிறார்.

அதன் பிறகு சந்தியாவை தீபாவத்தை காட்ட சொல்கிறார். சந்தியாவை தொடர்ந்து கண்ணம்மா தீபாரதனை காட்டுகிறார். அதன் பிறகு சிவகாமி தீபாரதனை காட்டும் போது சாமியின் கண்களில் இருந்து ரத்தம் வடிய நகையை திருடியது சிவகாமி தான் என கூறுகிறார். ஊர் மக்களும் இதை அப்படியே நம்பி சிவகாமியை தீட்டித்திருக்கின்றனர். இவர்களை போலீசில் பிடித்துக் கொடுக்குமாறு சொல்கின்றனர் ஆனால் இவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருவதாக சாமியார் கூறுகிறார். அதாவது 48 மணி நேரத்தில் நாங்கள் எடுத்து வந்து கொடுத்து காலில் விழுந்து குடும்பத்தோடு மன்னிப்பு கேட்க வேண்டும் அது வரைக்கும் இவர்களுடன் யாரும் அன்னம் தண்ணீர் பகிர்ந்து கொள்ள கூடாது. பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது அப்படி யாராவது ஏதாவது செய்தால் உங்கள் குடும்பத்தையும் தாக்கும் என கூறுகிறார்.

பிறகு எல்லோரும் அங்கிருந்து கலைந்து செல்ல இரவு நேரத்தில் பாரதி கண்ணம்மா சரவணன் சந்தியா என நால்வரும் சாமியாரை சந்தித்து பேசுகின்றனர். என்ன பழி வாங்கத்தான் நீங்களே திருடி வச்சுக்கிட்டு இப்படி என் குடும்பத்தின் மேல் பழி போடறிங்க என சந்தியா கூறுகிறார். பாரதி இதையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன் என்ன சொல்ல சாமியார் முதலில் இந்த பிரச்சினையை தலையிட்டது யார் கோர்ட்டில் கேஸ் போட்டு கோவில் கட்ட தரை போட்டது யார் நீங்கதானே என சந்தியாவிடம் இடம் சத்தம் போடுகிறார். கேசை வாபஸ் வாங்க வேண்டும் என மிரட்டுகிறார்.

இப்போ இத தென்காசியில் என்னோடது தான் நான் தான் தென்காசி என வசனம் பேசுகிறார். நான் சும்மா கண்ண காமிச்சாலே போதும் இந்த ஊர் ஜனங்களே உங்களை அடித்து துரத்திடுவாங்க என மிரட்டல் எடுக்க இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா ராஜா ராணி 2 மெகா சங்கமம் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.