பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் பிரபல நடிகரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Bharathi Kannamma Akilan in Vishal Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக நடித்து வருபவர் அகிலன். இவருடைய உண்மையான பெயர் ரிஷி.

பாரதியை விட இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி செய்த தவறுகள் இவை..

பிரபல நடிகரான விஷால் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரிஷி ஒப்பந்தமாகியுள்ளார். ‌ அவர் விஷாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Thalapathy 65 Official First Look | Thalapathy Vijay | Nelson Dilipkumar | Anirudh |HD

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.