
TRP-ல் தொடர்ந்து பலத்த அடி வாங்கி வருகிறது பாரதி கண்ணம்மா சீசன் 2.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் ரோஜா சீரியல் புகழ் நாயகன் சிப்பு சூரியன் நாயகனாக நடிக்க வினுஷா தேவி நாயகியாக நடித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல் இன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் அதன் பிறகு கதைக்களம் வேகமாக நகராமல் இழுத்துக் கொண்டு இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை பெற்று முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு பாரதிகண்ணம்மா சீசன் 2 ஒளிபரப்பாக தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலில் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஈர்ப்பு இல்லாமல் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் நாளுக்கு நாள் TRP-ல் பலத்த அடிவாங்கி வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை தக்கவைத்து வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல்.
கார்த்திக் ராஜ் நாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியலில் கார்த்திக் தீபா கல்யாணம் நெருங்கும்போது டிஆர்பி ரேட்டிங் இன்னும் எக்கச்சக்கமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா சீசன் 2 நிலைமை இப்படியே போனால் கூடிய விரைவில் எண்டு கார்டு போட்டு இழுத்து மூட வேண்டியது தான் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.